Breaking News
ஐரோப்பிய ஆணையம் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை 4 ஆண்டுகள் நீட்டிக்க முன்மொழிகிறது
பேச்சுவார்த்தைகளின் விளைவாக முன்மொழியப்பட்ட நீட்டிப்பு என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
சிறிலங்கா போன்ற நாடுகள் இடைக்காலத்தில் தங்கள் முன்னுரிமை அணுகலை இழக்கக்கூடாத வண்ணம், ஐரோப்பிய ஆணையம் தற்போதைய ஜிஎஸ்பி பிளஸ் திட்டத்திற்கு 31 டிசம்பர் 2027 வரை நான்கு ஆண்டுகளுக்கு நீட்டிக்க முன்மொழிந்துள்ளது.
புதிய ஜி.எஸ்.பி பிளஸ் உடன்படிக்கை தொடர்பாக ஐரோப்பிய ஒன்றியத்தின் இணை சட்டமன்ற உறுப்பினர்களுக்கு இடையில் நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளின் விளைவாக முன்மொழியப்பட்ட நீட்டிப்பு என்று ஐரோப்பிய ஒன்றியத்தின் சிறிலங்காவுக்கான பிரதிநிதிகள் குழு தெரிவித்துள்ளது.
கட்டண வசதியின் நீடிப்பு 27 பன்னாட்டு உடன்படிக்கைகளின் கீழ் அதே கடமைகளுடன் ஐரோப்பிய ஒன்றிய சந்தைகளைத் தொடர்ந்து அணுகச் சிறிலங்காவுக்கு வழி தரும் என்று அது மேலும் கூறியுள்ளது.





