தாய்மார்கள் எவரும் இனி இராணுவத்துக்கு தமது பிள்ளைகளை தாரைவார்க்க கூடாது - சுரேஸ் சலேவின் தாய்
எனது மகனுக்காக சத்தியாகிரக போராட்டத்தை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
நாட்டுக்காக எனது மகனை அர்ப்பணித்தேன்.ஆனால் அரசியல் நோக்கத்துக்காக பழிகொடுக்க போவதில்லை. இலங்கை தாய்மார்கள் எவரும் இனி இராணுவத்துக்கு தமது பிள்ளைகளை தாரைவார்க்க கூடாது அவ்வாறு வழங்கினால் என்னை போன்றே போராட நேரிடும் என அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி சுரேஸ் சலேவின் தாய் குறிப்பிட்டார்.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுப்புக்காகவலில் வைக்கப்பட்டுள்ள சுரேஸ் சலேவை விடுவிக்க கோரி எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கோட்டை புகையிரத நிலையம் முன்பாக 08-06-2026அன்று சத்தியாகிரக போராட்டத்தை ஆரம்பித்தனர்.இந்த போராட்டத்தில் கலந்துக் கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, எனது மகனான சுரேஸ் சலேவின் நிலையை கண்டு என் மனம் வேதனையடைகிறது. நாங்கள் இதுவரை காலமும் ஊடகங்கள் முன்பாக வந்ததில்லை. எமக்கு பாரியதொரு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அதனை மக்களுக்கு வெளிப்படுத்துவதற்காகவே இந்த இடத்துக்கு வந்தோம்.
எனது மகனுக்காக சத்தியாகிரக போராட்டத்தை ஏற்பாடு செய்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். நாட்டுக்கு சேவையாற்றுவதற்காகவே நான் எனது மகனை அர்ப்பணித்தேன். அரசியல் பழிவாங்களுக்காக மகனை பழி கொடுப்பதற்கு நாங்கள் தயாராகவில்லை.
எனது மகனுக்கு நீதி கிடைக்க வேண்டும். அவர் பாதுகாக்கப்பட வேண்டும். இலங்கை தாய்மார்கள் எவரும் இனி இராணுவத்துக்கு தமது பிள்ளைகளை தாரைவார்க்க கூடாது அவ்வாறு வழங்கினால் என்னை போன்றே போராட நேரிடும் என்பதை குறிப்பிட்டுக் கொள்கிறேன் என்றார்.





