நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல் - 200 கைதிகளுக்கு எதிராக மனிதப் படுகொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல்
இந்த மோதலின் பின்னணியில் சுரேஷ் மற்றும் "புருமுனா" உள்ளிட்ட 13 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் செயற்பட்டுள்ளமை உயர்மட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் 8 சிறைச்சாலை அதிகாரிகள் , கைதிகள் உள்ளடங்களாக 29 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் சிறைச்சாலை மோதல் சம்பவத்துக்கு காரணமானவர்கள் என சந்தேகிக்கப்படும் 200 கைதிகளுக்கு எதிராக மனிதப் படுகொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட உள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டுவரும் குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
நீர்கொழும்பு சிறைச்சாலையில் கடந்த 5 மற்றும் 6 ஆம் திகதிகளில் இடம்பெற்ற மோதல் சம்பவத்தில் சிறைச்சாலை அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 8 சிறைக் காவலர்கள் உட்பட மொத்தம் 29 பேர் உயிரிழந்துள்ளதோடு, நுற்றிட்டகும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.
இக்கோர சம்பவம் தொடர்பில் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பல விசேட பொலிஸ் குழுக்கள் விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ள நிலையில், இந்த மோதலின் பின்னணியில் சுரேஷ் மற்றும் "புருமுனா" உள்ளிட்ட 13 ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகள் செயற்பட்டுள்ளமை உயர்மட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
இவ்விசாரணைகளின் போது, குற்றச் செயலுடன் தொடர்புடைய சந்தேகநபர்களைத் துல்லியமாக அடையாளம் காண்பதற்காகச் சிறைச்சாலை வளாகத்திலுள்ள வீடியோ காட்சிகளைப் பயன்படுத்துவதற்குக் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த மோதலுக்கு காரணமான சந்தேகநபர்களின் கைகளுக்குப் பல அதிநவீன ஆயுதங்கள் கிடைத்துள்ளதாகவும், இந்த ஆயுதங்கள் அவர்களுக்கு எவ்வாறு விநியோகிக்கப்பட்டன என்பது குறித்து அறிய விசேட தேடுதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். அத்துடன், மீகமுவ சிறைச்சாலையின் ஆயுதக் களஞ்சியசாலையில் உள்ள ஆயுதங்கள் குறித்தும் பொலிஸார் விசாரணை ஒன்றைத் ஆரம்பித்துள்ளனர்.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் சந்தன கொடிதுவாக்கு, குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும், விசாரணைகளின் நிறைவில் இந்த மோதலுடன் தொடர்புடைய கைதிகள் அனைவருக்கும் எதிராக நீதிமன்றத்தில் மனித படுகொலை குற்றச்சாட்டின் கீழ் வழக்குத் தொடரப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.





