ஜெனிவாவில் படைவீரர்களை காட்டிக்கொடுக்கும் சதித்திட்டம் : எல்லே குணவன்ச தேரர்
ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் இந்த மாதம் இடம்பெற இருக்கிறது. மனித உரிமைகள் தொடர்பில் எமக்கு கற்றுக்கொடுப்பதற்கு வெள்ளையர்களுக்கு முடியுமா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது.

இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமை பேரவையின் போது நாட்டை பாதுகாத்த படைவீரர்களை காட்டிக்கொடுக்கும் சதித்திட்டம் ஒன்று இடம்பெறவுள்தாக தெரியவருகிறது. அரசாங்கம் அதற்கு இடமளிக்கக்கூடாது என எல்லே குணவன்ச தேரர் தெரிவித்தார்.
இந்த மாதம் இடம்பெறவுள்ள ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் தொடர்பில் 02-09-2025 அன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தா்ர.
இதுதொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடர் இந்த மாதம் இடம்பெற இருக்கிறது. மனித உரிமைகள் தொடர்பில் எமக்கு கற்றுக்கொடுப்பதற்கு வெள்ளையர்களுக்கு முடியுமா என்ற கேள்வி எமக்கு இருக்கிறது. நாங்கள் கால்நடைகளின் உரிமைகளை பாதுகாக்க நடவடிக்கை எடுத்த ஒரு இனமாகும். அவ்வாறு இருக்கையில் மனித உரிமை தொடர்பில் எங்களுக்கு ஆலோசனை வழங்க வெள்ளைக்கார்களுக்கு முடியுமா?
அத்துடன் எமது நாட்டை பயங்கரவாத யுத்தத்தில் இருந்த மீட்ட படை வீரர்களை காட்டிக்கொடுக்கும் சதித்திட்டம் ஒன்றை வெள்ளையர்கள் மேற்கொண்டுவருகிறார்கள் என்பதை எங்களுக்கு தெரிந்துகொள்ள கிடைக்கிறது. அதனால் மக்களின் நற்பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தி, சமூகத்துக்கு நல்ல பணிகளை செய்ய இருந்த மனிதர்களையும் அதற்குள் இழுத்துக்கொண்டு, செயற்படுவதாகவே தெரியக்கூடியதாக இருக்கிறது.
இந்த அரசாங்கத்தின் கீீழ் இருக்கும் பெரும்பான்மையானவர்கள், எம்முடன் இணைந்து, நாட்டுக்காக நாட்டுப்பற்றுடன் செயற்பட்டவர்கள். அதனால் நாட்டை மீட்ட இராணுவத்தினருக்கு நாங்கள் தெரிவித்த விடயங்கள் என்ன என்பதை இந்த அரசாங்கத்தில் இருப்பவர்களுக்கு நினைவுபடுத்த விரும்புகிறோம். அதனால் ஜெனிவா மனித உரிமை கூட்டத்தொடரில் எமது இராணுவ வீரர்களை காட்டிக்கொடுக்கும் எந்த விடயங்களுக்கும் அரசாங்கம் துணைபோகக்கூடாது என்றார்.