மூன்றாவது நீட்டிக்கப்பட்ட நிதி வசதி மறுஆய்வு குறித்து பன்னாட்டு நாணய நிதிய அதிகாரப்பூர்வ அறிக்கை இன்று வெளியாகிறது
பன்னாட்டு நாணய நிதியத்தின் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (22) வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அரசாங்கம் உறுதிப்படுத்தியது.

விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் கீழ் மூன்றாவது மீளாய்வு தொடர்பாக பன்னாட்டு நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் இன்று (23) காலை உத்தியோகபூர்வ அறிக்கையொன்றை வெளியிடவுள்ளனர்.
இந்த அறிவிப்பில் மூன்றாவது மதிப்பாய்வை நிறைவு செய்வது தொடர்பான பொருளாதாரக் கொள்கைகள் குறித்த பணியாளர் மட்ட ஒப்பந்தத்தின் விவரங்கள் சேர்க்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பன்னாட்டு நாணய நிதியத்தின் விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதி வேலைத்திட்டத்தின் கீழ் மூன்றாவது மீளாய்வு தொடர்பான கலந்துரையாடல் நேற்று (22) வெற்றிகரமாக நிறைவடைந்ததாக அரசாங்கம் உறுதிப்படுத்தியது.
ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பில் பன்னாட்டு நாணய நிதியத்தின் மூத்த தூதுக்குழுவின் தலைவர் பீட்டர் ப்ரூயர் தலைமையிலான குழுவினர் கலந்துகொண்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.