விமானத்தில் பாலியல் தொல்லை கொடுத்த இந்தியர் கொழும்பு விமான நிலையத்தில் கைது
சனிக்கிழமை (ஏப்ரல் 12) காலை துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானம் எஃப் இசட் 822 இல் கொழும்புக்கு வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
துபாயில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த விமானத்தின் போது பெண்பயணி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்த குற்றச்சாட்டில் இந்தியர் ஒருவர் கட்டுநாயக்க பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து விமானநிலைய காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் சனிக்கிழமை (ஏப்ரல் 12) காலை துபாயிலிருந்து ஃபிட்ஸ் ஏர் விமானம் எஃப் இசட் 822 இல் கொழும்புக்கு வந்ததாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர். அவர் விமானத்தின் போது பெண் பயணியை பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தியதாகவும், பாதிக்கப்பட்டவர் உடனடியாக சம்பவம் குறித்து விமான ஊழியர்களுக்கு அறிவித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு வந்தவுடன், விமானநிலைய பாதுகாப்புப் படையினர் அவரை கைது செய்தனர். அவர் 35 வயதான இந்திய நாட்டைச் சேர்ந்த ஆண் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவர் கொழும்பு நீதவான் நீதிமன்ற இலக்கம் 01 இல் நிறுத்தப்படவுள்ளார்.





