தைவானின் உயர் பாதுகாப்பு அதிகாரி அமெரிக்கா பயணம்
ஜனவரி 20 அன்று வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பின்னர் டிரம்ப் இந்த சேனலைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
தைவானை சுற்றியுள்ள போர்ப் பயிற்சிகளை சீனா முடித்த சில நாட்களுக்குப் பிறகு, ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்த தைவானின் தேசியப் பாதுகாப்புப் பேரவையின் தலைவர் அமெரிக்காவுக்கு வந்தார் என்று இந்த விஷயத்தை நன்கு அறிந்த ஒரு வட்டாரம் வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளது.
"சிறப்பு சேனல்" என்று அழைக்கப்படும் ஒரு கூட்டத்திற்கான தூதுக்குழுவிற்கு ஜோசப் வூ தலைமை தாங்கினார் என்று பைனான்சியல் டைம்ஸ் முன்பு செய்தி வெளியிட்டது. ஜனவரி 20 அன்று வெள்ளை மாளிகைக்குத் திரும்பிய பின்னர் டிரம்ப் இந்த சேனலைப் பயன்படுத்துவது இதுவே முதல் முறையாகும்.
இந்த வார தொடக்கத்தில், சீன இராணுவம் தாய்வானைச் சுற்றி இரண்டு நாள் போர்ப் பயிற்சிகளை முடித்தது அதில் அது கிழக்குச் சீனக் கடலில் நீண்டதூர, நேரடித் துப்பாக்கிச் சூட்டுப் பயிற்சிகளை நடத்தியது. இது தீவைச் சுற்றி ஒத்திகைகளின் தீவிரப்பாட்டைக் குறிக்கிறது.





