பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 35.9 சதவீதம் வரை குறைந்தது: நீர்ப்பாசனத் திணைக்களம்
வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் ஆவியாதல் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதால், அன்றாட மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு நீரினைக் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் நிலவும் கடுமையான வறட்சியான வானிலை காரணமாக திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலுள்ள பிரதான நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் 35.9 சதவீதம் வரை குறைந்துள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய வானிலையுடன் இந்நீர்த்தேக்கங்களிலிருந்து ஆவியாகும் நீரின் அளவும் அதிகமாக உள்ளது. எனவே, விவசாய நடவடிக்கைகள் மற்றும் பிற அன்றாட நடவடிக்கைகளுக்கு நீரினைப் பயன்படுத்தும்போது மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமாகும் குறிப்பாக அம்பாறை, மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் மொணராகலை ஆகிய மாவட்டங்களில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் குறைந்தபட்ச அளவை எட்டியுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர்முகாமைத்துவ பணிப்பாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, தற்போது சிறுபோக விவசாயப் பணிகள் இறுதிப் கட்டத்தை எட்டியுள்ளதால், நிலவும் நீரின் அளவு விவசாய நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும்,அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய வானிலை காரணமாக நீர்த்தேக்கங்களிலிருந்து நீர் ஆவியாதல் எதிர்பார்த்ததை விட அதிகரித்துள்ளதால், அன்றாட மற்றும் விவசாய நடவடிக்கைகளுக்கு நீரினைக் மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்.
திணைக்களத்தினால் நிர்வகிக்கப்படும் பிரதான நீர்த்தேக்கங்களில் சேமித்து வைக்கக்கூடிய நீரின் அளவு தற்போது 35.9 சதவீதமாக உள்ளது. குறிப்பாக அம்பாறை மாவட்டம், மட்டக்களப்பு மாவட்டம், திருகோணமலை மாவட்டம் மற்றும் மொணராகலை மாவட்டம் ஆகிய பகுதிகளில் உள்ள நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் மிகவும் குறைவாகவே உள்ளது.
இருப்பினும், தற்போது சிறுபோக பயிர்ச்செய்கை நடவடிக்கைகள் இறுதிப் கட்டத்தை அடைந்துள்ளதால், இந்த நீரின் அளவு விவசாய நடவடிக்கைகளுக்குப் போதுமானதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும்,இந்நீர்த்தேக்கங்களிலிருந்து குடிநீர் பெறும் பகுதிகளுக்கு எதிர்வரும் மாதங்களில் கையிருப்பில் உள்ள நீரின் அளவு போதுமானதாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அதிக வெப்பநிலை மற்றும் காற்றுடன் கூடிய வானிலையுடன் இந்நீர்த்தேக்கங்களிலிருந்து ஆவியாகும் நீரின் அளவும் அதிகமாக உள்ளது. எனவே, விவசாய நடவடிக்கைகள் மற்றும் பிற அன்றாட நடவடிக்கைகளுக்கு நீரினைப் பயன்படுத்தும்போது மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துவது அவசியமாகும் என்றார்





