Breaking News
பௌத்த மதம் குறித்து கருத்து தெரிவித்த நதாஷா எதிரிசூரிய விமான நிலையத்தில் கைது
தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டார்.
பௌத்த மதத்தை அவமரியாதை செய்யும் வகையில் கருத்துக்களை வெளியிட்ட நடாஷா எதிரிசூரிய, நாட்டை விட்டு வெளியேற முற்பட்ட வேளையில் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் பண்டாரநாயக்க பன்னாட்டு விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார் என்று காவல்துறை தெரிவித்துள்ளது.
அண்மையில் கொழும்பில் நடைபெற்ற நகைச்சுவை நிகழ்ச்சியின் போது, பௌத்த தத்துவம் மற்றும் கலாச்சாரம் மற்றும் கிறிஸ்தவ மதம் குறித்து அவமரியாதைக்குரிய கருத்துக்களை சந்தேகக் குற்றவாளி தெரிவித்ததாக எழுந்த புகாரையடுத்துச் சனிக்கிழமையன்று குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.
பின்னர், சந்தேகத்திற்கு இடமான காணொலி ஒன்றில், தான் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்காக வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டார்.





