ஜனாதிபதி அநுரகுமாரவுடன் இணைந்து பணியாற்ற தயார்: சீன ஜனாதிபதி தெரிவிப்பு
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், 04-02-2026 அன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார்.
சீன - இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு தான் மிகுந்த முக்கியத்துவஅளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த நன்மைகளைத் தரும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுப் பங்களிப்பை ஆழப்படுத்தவும், பொதுவான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பவும் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் இணைந்து பணியாற்றத் தான் தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் 78ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஷி ஜின்பிங், 04-02-2026 அன்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பியுள்ள வாழ்த்து செய்தியிலேயே இதனைத் தெரிவித்துள்ளார். சீன ஜனாதிபதி தனது வாழ்த்து செய்தியில், சீனாவும் இலங்கையும் அபிவிருத்தி மற்றும் மறுமலர்ச்சிப் பாதையில் பயணிக்கும் சக பயணிகள் என்றும், இருதரப்பு நலன்களுக்காக ஒத்துழைப்புடன் செயல்படும் சிறந்த பங்காளிகள் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
2025 ஜனவரியில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சீனாவிற்கு மேற்கொண்ட அரச பயணத்தை நினைவுகூர்ந்துள்ள அவர், அந்த பயணத்தின் போது இருதரப்பு உறவுகளின் வளர்ச்சி குறித்து பயனுள்ள பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு பரந்த இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.
சீன - இலங்கை உறவுகளின் வளர்ச்சிக்கு தான் மிகுந்த முக்கியத்துவமளிப்பதாகக் குறிப்பிட்டுள்ள ஷி ஜின்பிங், இரு நாட்டு மக்களுக்கும் சிறந்த நன்மைகளைத் தரும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கூட்டுப் பங்களிப்பை ஆழப்படுத்தவும், பொதுவான எதிர்காலத்தைக் கொண்ட ஒரு சமூகத்தைக் கட்டியெழுப்பவும் ஜனாதிபதி அநுரகுமாரவுடன் இணைந்து பணியாற்ற தான் தயாராக இருப்பதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





