Breaking News
நேபியனில் ஒருவர் பலி
கிரேக் ஹென்றி டிரைவின் 300 புளோக்கில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த செய்திகளுக்கு அவசரச் சேவைகள் பதிலளித்தன
ஒட்டாவாவின் நேப்பியன் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காலை இடம்பெற்ற சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மற்றுமொருவர் காயமடைந்துள்ளதாக ஒட்டாவா காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கிரேக் ஹென்றி டிரைவின் 300 புளோக்கில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வந்த செய்திகளுக்கு அவசரச் சேவைகள் பதிலளித்தன என்று ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணிக்குப் பிறகு ஒரு சமூக ஊடக பதிவில் காவல்துறையினர் தெரிவித்தனர்.
பொதுமக்கள் அப்பகுதிக்கு செல்வதை தவிர்க்குமாறு காவல்துறையினர் கேட்டுக் கொண்டனர்.





