இலங்கையின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக பிரியந்த வீரசூரிய நியமனம்
இலங்கை பொலிஸ் சேவையில் பொலிஸ் கான்ஸ்டபிள்,உப பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று பதவி நிலைகளையும் கடந்த பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு தெரியான முதலாவது பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கருதப்படுகிறார்.
நாட்டின் 37 ஆவது பொலிஸ்மா அதிபராக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
புதிய பொலிஸ் மாஅதிபர் பிரியந்த வீரசூரியவுக்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க 13-08-2025அன்று ஜனாதிபதி செயலகத்தில் வைத்து பொலிஸ்மா அதிபரிடம் கையளித்தார்.
இலங்கை பொலிஸ் சேவையில் பொலிஸ் கான்ஸ்டபிள்,உப பொலிஸ் அத்தியட்சகர் மற்றும் பொலிஸ் அத்தியட்சகர் ஆகிய மூன்று பதவி நிலைகளையும் கடந்த பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு தெரியான முதலாவது பொலிஸ்மா அதிபராக சட்டத்தரணி பிரியந்த வீரசூரிய கருதப்படுகிறார்.
முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் மீது சுமத்தப்பட்ட அதிகார துஸ்பிரயோகம் மற்றும் துர்நடத்தை தொடர்பில் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுக்கள் 2002 ஆம் ஆண்டின் 05 ஆம் இலக்க அலுவலர்களை அகற்றும் (நடவடிக்கைமுறை) சட்டத்தின் பிரகாரம் விசாரிக்கப்பட்டு பாரளுமன்றத்தில் 177 பெரும்பான்மை வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டது.
இதனைத் தொடர்ந்து பொலிஸ் மாஅதிபர் பதவிக்கு பிரியந்த வீரசூரியவின் பெயரை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க முன்மொழிந்தார்.இந்த பரிந்துரைக்கு அரசியலமைப்பு பேரவை அரசியலமைப்பின் 61 (ஈ),(ஆ) பிரகாரம் ஏகமனதாக ஒப்புதலளித்தது.