இரட்டைக்கொலை வழக்கில் 8 பேருக்கு மரணதண்டனை - கொழும்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பு
வழக்கின் 7 பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததோடு, ஆரம்பத்திலிருந்தே தலைமறைவாகியுள்ள மற்றுமொரு பிரதிவாதி எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.
கொழும்பு, தாராவத்தை பகுதியில் 1997 ஆம் ஆண்டு இருவர் படுகொலை செய்யப்பகட்ட சம்பவத்தில் குற்றவாளியாக காணப்பட்ட 8 பேருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 08-07-2026 அன்று மரணதண்டனை வித்துள்ளது.
நீண்ட வழக்கு விசாரணையின் பின்னர், கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி புத்திக சி. ராகல நேற்று (08) இந்தத் தீர்ப்பை வழங்கினார். 1997 ஈம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21 ஆம் திகதியன்று தாராவத்தை பகுதியில் ஹேவா படகொடகே குசுமாவதி மற்றும் வேலாயுதம் உதயகுமார் ஆகியோரைத் தாக்கிக் படுகொலை செய்தமை தொடர்பில் சட்டமா அதிபரினால் இவ்வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
வழக்கின் 7 பிரதிவாதிகள் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்ததோடு, ஆரம்பத்திலிருந்தே தலைமறைவாகியுள்ள மற்றுமொரு பிரதிவாதி எதிராக திறந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. இந்நிலையி்ல் குறித்த ஒரு பிரதிவாதியின்றி வழக்கு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டிருந்த நிலையில். மேற்படி சந்தேகநபர்கள் நீதிமன்றத்தால் குற்றவாளிகளாக காணப்பட்டுள்ளதை அடுத்து இந்த மரணதண்டனை வழங்கப்பட்டுள்ளது.





