அரசாங்கத்துக்கு எதிரான பயணத்தை கைவிடோம்: ஹரின் பெர்னாண்டோ
ஜே.வி.பி.னரே 76 ஆண்டு கால சாபத்துக்கு பிரதான காரணம். இந்த அரசாங்கத்துக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.
மக்களை ஏமாற்றிய பொய்க்காரர்களை ஆட்சியிலிருந்து விரட்டியடித்த பின்னரே எமது பயணம் முடிவுக்கு வரும். எம்மை ஆயிரம் சிறைகளில் அடைத்தாலும் இந்த பயணத்தை நாம் நிறுத்தப் போவதில்லை. நாமல் ராஜபக்ஷவைப் போன்று இரண்டாம் தலைமுறை தலைவர்களை இணைத்துக் கொண்டு அரசாங்கத்து எதிரான பயணம் தொடரும் என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதி பொதுச் செயலாளர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்தார்.
நுகேகொடையில் 21-11-2025 அன்று இடம்பெற்ற அரச எதிர்ப்பு பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், 76 ஆண்டுகால சாபம் குறித்து பேசும் இந்த சாப ஆட்சியாளர்கள் தொடர்பில் பேசும் பணியே எனக்கு வழங்கப்பட்டிருக்கிறது. 1948 இல் இருந்து 17 ஆண்டுகள் இந்நாட்டில் சாபம் காணப்படவில்லை. 1965 பிறகு சாபங்கள் ஆரம்பித்தன. ரோஹண விஜேவீரவுக்கு ஆட்சி கிடைக்கவில்லை என்பதற்காக இவர்களே நாட்டின் அழிவை ஆரம்பித்தனர்.
ஜே.வி.பி.னரே 76 ஆண்டு கால சாபத்துக்கு பிரதான காரணம். இந்த அரசாங்கத்துக்கு எதிராக சகல எதிர்க்கட்சிகளும் ஒன்று கூடியுள்ள முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும். அடுத்தடுத்த கூட்டத்தில் இணைவதற்கு எவ்வித நிபந்தனையும் என்று ஐக்கிய மக்கள் சக்திக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
மக்களை ஏமாற்றிய பொய்க்காரர்களை ஆட்சியிலிருந்து விரட்டியடித்த பின்னரே எமது பயணம் முடிவுக்கு வரும். நாமல் ராஜபக்ஷவை போன்று ஏனைய சகல கட்சிகளிலும் இரண்டாம் தலைமுறை தலைவர்கள் இருக்கின்றனர். அவர்கள் அனைவரையும் நினைத்துக் கொண்டு இந்தப் போராட்டத்தை தொடருவோம்.
இங்கு முன்னால் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவையும் நினைவு கூர்கின்றோம். மஹிந்த ராஜபக்ஷ 30 ஆண்டு கால யுத்தத்தை நிறைவு செய்த தலைவராகவும், ரணில் விக்ரமசிங்க இந்நாட்டில் வரிசை யுகத்தை நிறைவுக்கு கொண்டு வந்த தலைவராகவும் உள்ளனர். இதனை நாம் நினைவில் கொள்ள வேண்டும். எம்மை ஆயிரம் சிறைகளில் அடைத்தாலும் இந்த பயணத்தை நாம் நிறுத்தப் போவதில்லை என்றார்.





