புத்தாண்டு வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்ட ரணில் - சஜித்
இந்த தொலைபேசி உரையாடலின் போது இரு தலைவர்களும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு தொலைபேசி ஊடாக புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பிரேமதாசவும் 2026 ஆம் ஆண்டின் முதல் நாளில் முன்னாள் ஜனாதிபதிக்கு தனது வாழ்த்துக்களைப் பகிர்ந்து கொண்டார். இந்த தொலைபேசி உரையாடலின் போது இரு தலைவர்களும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளனர்.
இதேவேளை, இந்த வாழ்த்துப் பரிமாற்றமானது புத்தாண்டில் ஒரு புதிய தொடக்கத்தைக் குறிக்கலாம் என ஐக்கிய தேசிய கட்சியின் அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் இம்மாதத்துக்குள் ரணில் மற்றும் சஜித் பிரேமதாச நேரில் சந்தித்து இரு கட்சிகளின் இணைவு குறித்து தீர்க்கமான முடிவை எடுப்பார்கள் என தெரிவிக்கப்படுகிறது.
அதற்கமைய ஐக்கிய மக்கள் சக்தி , ஐக்கிய தேசிய கட்சி தலைமையில் கூட்டணியமைத்து அக்கூட்டணியின் தலைவராக சஜித் பிரேமதாச செயற்பவது குறித்தும், ரணில் விக்கிரமசிங்க அதன் ஆலோசகராக செயற்படுவது குறித்தும் இதன் போது அவதானம் செலுத்தப்படவுள்ளது.
அண்மையில் தேர்தல் எதுவும் இடம்பெறக் கூடிய வாய்ப்பில்லை என்ற நிலையில், அடுத்த தேர்தல் அறிவிக்கப்படுவதற்கும் இக்கூட்டணியை அமைத்து அதனை பலப்படுத்தி அதில் வெற்றி பெறுவதற்குமான வேலைத்திட்டங்களை முன்னெடுப்பது குறித்தும் கலந்துரையாடல்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





