நிகழ்நிலை காப்புச் சட்டம் நீக்கும் சட்டமூலம் சமர்ப்பிப்பு
இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் 2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டமானது இரத்தாகும் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.
நிகழ்நிலை காப்புச் சட்டம் (இரத்துச் செய்தல்) சட்டமூலத்தை சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க இரண்டாம் மதிப்பீட்டுக்காக சபையில் முன்வைத்தார்.
பாராளுமன்றம் 23-04-2026 அன்று கூடிய போது சபை முதல்வர் சட்டமூலத்தை இவ்வாறு முன்வைத்தார்.
2024 ஆம் ஆண்டின் 9 ஆம் இலக்க, நிகழ்நிலை காப்புச் சட்டத்தை இரத்து செய்வதற்காக புதிய ஜனநாயக முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்கவினால் முன்வைக்கப்பட்ட தனிநபர் பிரேரணைக்கமைய, 'நிகழ்நிலை பாதுகாப்பு' தொடர்பான (இரத்துச் செய்தல்) சட்டமூலம் 2025.04.18 ஆம் திகதியன்று வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்டது.
'இந்த சட்டம் 2025ஆம் ஆண்டின்.... இலக்க நிகழ்நிலை பாதுகாப்பு தொடர்பான (இரத்துச் செய்தல்) சட்டமாக அடையாளப்படுத்தப்படும்.இந்த சட்டம் நிறைவேற்றப்பட்டவுடன் 2024ஆம் ஆண்டின் 09ஆம் இலக்க நிகழ்நிலை காப்புச் சட்டமானது இரத்தாகும் என்பதை கவனத்திற்கொள்ள வேண்டும்.
இதற்கமையவாகவே சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க நேற்றைய தினம் சட்டமூலத்தை இரண்டாம் வாசிப்புக்காக சபையில் சமர்ப்பித்தார். இச்சட்டமூலம் பாராளுமன்ற அரசியலமைப்பு நிலையியற் குழுவின் பரிசீலனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.





