தொழுகை மறுக்கப்பட்டதாக தலித் முஸ்லிம் குடும்பம் குற்றச்சாட்டு
புகாரளித்த முகமது வாசிம், 2024 ஆம் ஆண்டு முதல் தாங்கள் தொடர்ச்சியான தொந்தரவுகளையும் நிறைவேற்றப்படாத உடன்படிக்கைகளையும் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில், 120 ஆண்டுகள் பழமை வாய்ந்த பள்ளிவாசலில் தொழுகை நடத்த அனுமதி மறுக்கப்பட்டதாகவும், நன்கொடைகள் ஏற்கப்படவில்லை என்றும், சாதி அடிப்படையிலான பாகுபாடு மற்றும் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டதாகவும் தலித் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த துன்னா சமூகத்தினர் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
புகாரளித்த முகமது வாசிம், 2024 ஆம் ஆண்டு முதல் தாங்கள் தொடர்ச்சியான தொந்தரவுகளையும் நிறைவேற்றப்படாத உடன்படிக்கைகளையும் எதிர்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளார்.
மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் கிருஷ்ண குமார் பிஷ்னோயின் தலையீட்டைத் தொடர்ந்து, துருக்கிய சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேர் மீது காவல்துறையினர் முதல் தகவல் அறிக்கைபதிவு செய்துள்ளனர்.
முதலமைச்சர் யோகி ஆதித்யநாத், இப்பகுதியில் துருக்கிய சமூகத்தின் செல்வாக்கு குறித்து அண்மையில் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.