Breaking News
250 மில்லியன் வழங்கிய முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, 09-12-2025 அன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவை கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து நிதியை கையளித்தார்.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையிலான பண்டாரநாயக்க ஞாபகார்த்த தேசிய நிதியம், அண்மைய அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களின் மீட்பு மற்றும் மீள்குடியேற்றத்திற்கு ஆதரவளிக்க நிறுவப்பட்ட அரசாங்க நிதியத்துக்கு 250 மில்லியன் ரூபா பங்களிப்பை வழங்கியுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, 09-12-2025 அன்று பிரதமர் ஹரிணி அமரசூரியவை கொழும்பிலுள்ள பிரதமர் அலுவலகத்தில் சந்தித்து நிதியை கையளித்தார்.
தித்வா புயலால் ஏற்பட்ட சீரற்ற காலநிலையால் இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கான புனரமைப்பு மற்றும் உதவிக்காக இந்த நிதி பயன்படுத்தப்படும் என்று அரச அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.