மயிலாடு துறையில் போராடிய இளைஞனின் விடயத்தை சுட்டிக்காட்டி இந்திய துணை ஜனாதிபதிக்கு தமிழரசுக்கட்சி கடிதம்
நாங்கள் பேசிக்கொண்டதற்கு இணங்க குறித்த இளைஞனது மீள்வருகைக்காக இந்திய அரசின் தரப்பில் செய்யப்பட வேண்டிய விடயங்களை துரிதமாக நிறைவேற்றும்படி குறித்த நிர்வாகிகளைப் பணிக்குமாறு தங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
இலங்கை திரும்ப விரும்பும் அனைத்து அகதிகளுக்கும் இந்திய அரசு தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய துணை ஜனாதிபதி இராதா கிருஷ்ணனிடத்தில் எழுத்துமூலம் கோரியுள்ளது.
மயிலாடுதுறை ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக இந்தியாவில் 25வருடங்களாக வாழ்ந்து வரும் 37 வயதான இளைஞர் ஒருவர் தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கோரி 19-04-2026 அன்று போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
தமிழகத்தில் பல்வேறு அகதிகள் முகாம்களில் வசித்து வரும் தான், உரிய ஆவணங்கள் மற்றும் உரிமைகள் இன்றி அநாதை போல வாழ்வதாகவும், தன் சொந்த நாட்டிற்குத் திரும்ப விரும்பவதாகவும் கண்ணீர் மல்கக் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை திரும்ப விரும்பும் அனைத்து அகதிகளுக்கும் இந்திய அரசு தரப்பில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறு இலங்கைத் தமிழரசுக்கட்சி இந்திய துணை ஜனாதிபதி இராதா கிருஷ்ணனிடத்தில் எழுத்துமூலம் கோரியுள்ளது.
மயிலாடுதுறை ஆட்சியாளர் அலுவலகம் முன்பாக இந்தியாவில் 25வருடங்களாக வாழ்ந்து வரும் 37 வயதான இளைஞர் ஒருவர் தன்னை சொந்த நாடான இலங்கைக்கு அனுப்பி வைக்குமாறு கோரி நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.
தமிழகத்தில் பல்வேறு அகதிகள் முகாம்களில் வசித்து வரும் தான், உரிய ஆவணங்கள் மற்றும் உரிமைகள் இன்றி அநாதை போல வாழ்வதாகவும், தன் சொந்த நாட்டிற்கு திரும்ப விரும்பவதாகவும் கண்ணீர் மல்க கோரிக்கை விடுத்துள்ளார்.
எம்மோடு உரையாடுவதற்காக உங்களது பெறுமதிமிக்க நேரத்தை ஒதுக்கித் தந்தமைக்காக முதற்கண் நன்றி செலுத்துகின்றோம். இச்சந்திப்பில் இலங்கைக்குத் திரும்பி வரவிருக்கும் அகதிகளின் மீள் வருகை சம்பந்தமாக தாங்கள் சொன்ன ஆக்கபூர்வமான கருத்துக்களுக்கும் நாம் நன்றி சொல்ல விரும்புகின்றோம்.
இக்கடிதத்தோடு இணைத்திருக்கும் காணொளிச் செய்தியில் அப்படியாகத் திரும்பி வரவிரும்பும் ஒரு இளைஞன் நேற்று செய்த போராட்டம் காண்பிக்கப்பட்டுள்ளது. நாங்கள் பேசிக்கொண்டதற்கு இணங்க குறித்த இளைஞனது மீள்வருகைக்காக இந்திய அரசின் தரப்பில் செய்யப்பட வேண்டிய விடயங்களை துரிதமாக நிறைவேற்றும்படி குறித்த நிர்வாகிகளை பணிக்குமாறு தங்களிடம் கேட்டுக்கொள்கிறோம்.
அதேவேளையில் இவரைப் போல திரும்பிவர விரும்பும் அனைவருக்கும் உங்களது அரசு தரப்பிலே செய்யவேண்டியவற்றை துரிதப்படுத்துமாறும் தங்களைக் கேட்டுக்கொள்கிறோம் என்றுள்ளது.





