டெல்லியில் சி.பி.ஐ., விசாரணைக்கு இன்று ஆஜராகிறார் த.வெ.க., விஜய்
இரு தினங்களுக்கு முன் , மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடய அறிவியல் துறை அதிகாரிகள் , சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர் .
டெல்லியில் உள்ள சி . பி . ஐ , தலைமை அலுவலகத்தில் , இன்று விசாரணைக்கு ஆஜராகிறார் , த . வெ . க , தலைவர் விஜய் .
கரூர் வேலுச்சாமிபுரத்தில் , கடந்த ஆண்டு செப்டம்பர் 27ல் , த . வெ . க , தலைவர் விஜய் பங்கேற்ற கூட்டத்தில் நெரிசலில் சிக்கி, நாற்பத்து ஒன்று பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து , சி . பி . ஐ , அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர் . அவர்களின் விசாரணையை ஓய்வு பெற்ற நீதிபதி அஜய்ரஸ்தோகி தலைமையிலான குழு கண்காணித்து வருகிறது
சம்பவ இடத்தில் , சி . பி . ஐ , அதி காரிகள் மற்றும் கண்காணிப்பு குழுவினர் நேரடியாக ஆய்வு செய்தனர்.
இரு தினங்களுக்கு முன் , மத்திய உள்துறை அமைச்சகம் மற்றும் மத்திய தடய அறிவியல் துறை அதிகாரிகள் , சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு நடத்தினர் . கரூரில் விஜய் பிரசாரம் செய்த வாகனத்தையும் பார்வையிட்டனர். அத்துடன் , இன்று விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என , த . வெ . க , தலைவர் விஜய்க்கு' சம்மன்' அனுப்பி இருந்தனர் . அதை ஏற்று , சென்னையில் இருந்து தனி விமானம் வாயிலாக , விஜய் இன்று டெல்லி சென்று விசாரணைக்கு ஆஜராகிறார்





