அமைச்சர் பிமலின் கருத்துக்கு எதிர்க்கட்சித்தலைவர் கண்டனம்
ஐந்தாம் தர கட்டுரை கூட எழுத தெரியாதவர்கள் தான் தரம் 6 இற்கான புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள்.
எதிர்க்கட்சியினருக்கு முதலில் கட்டுரை எழுத கற்பிக்க வேண்டும். ஐந்தாம் தர கல்வி அறிவு கூட இல்லாதவர்கள் தான் புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள் என்று சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்ட கருத்துக்கு எதிர்க்கட்சித் தலைவர் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.
பாராளுமன்றத்தில் 21-01-2026 அன்று நடைபெற்ற அமர்வின் போது வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது எதிர்க்கட்சியின் உறுப்பினர்களுக்கு மேலதிக கேள்வி கேட்பதற்கு அனுமதி மறுக்கப்பட்டதை தொடர்ந்து சபையில் சர்ச்சை ஏற்பட்டது.
இதற்போது எழுந்து உரையாற்றிய சபை முதல்வர் பிமல் ரத்நாயக்க, எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்களுக்கு முதலில் பாராளுமன்ற நிலையியல் கட்டளை பற்றி கற்பிக்க வேண்டும். அத்துடன் தரம் ஐந்துக்கான கட்டுரைகளை எழுதவும் பழக்க வேண்டும்.
ஐந்தாம் தர கட்டுரை கூட எழுத தெரியாதவர்கள் தான் தரம் 6 இற்கான புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள். தமது குறுகிய அரசியல் நோக்கங்களுக்காக புதிய கல்விக் கொள்கையை எதிர்க்கிறார்கள் என்றார்.
இதனைத் தொடர்ந்து எழுந்து உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச பாராளுமன்ற நிலையியல் கட்டளையின் பிரகாரம் கேள்வி கேட்கும் கேட்கும் போது அதற்கு முறையாக பதிலளிக்க வேண்டும் அதனை விடுத்து அவமதிக்கும் வகையில் பதிலளிக்க கூடாது. இவ்வாறான கருத்துக்களினால் தான் புதிய கல்விக் கொள்கையில் ஆபாச விடயங்கள் உள்ளடக்கப்பட்டு அரசாங்கம் நெருக்கடிக்குள்ளாகியுள்ளது என்றார்.





