தேசிய சுனாமி நினைவேந்தல் பேரலிய நினைவிடத்தில் முன்னெடுப்பு
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், நாட்டில் 35இ000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள்.பல பில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிவடைந்தன.
சுனாமி பேரலை அனர்த்தத்தால் உயிரிழந்தவர்களை நினைவு கூர்ந்து நேற்று நாடாவிய ரீதியில் 2 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் ஏற்பாட்டில் பேரலிய சுனாமி நினைவிடத்தில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
அதேபோல் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் சுனாமி நினைவாலயத்தில் உயிரிழந்தவர்களை நினைவுகூர்ந்து மலர் தூவி, தீபமேந்தி அஞ்சலி செலுத்தப்பட்டது.
2004.12.16 ஆம் திகதியன்று 2000 இற்கும் மேற்பட்ட பயணிகளுடன் பேரலிய பகுதியில் விபத்துக்குள்ளான புகையிரதம் ஒவ்வொரு வருடனும் நினைவுப்படுத்தப்படும். நேற்றைய தினமும் காலை 06 மணியளவில் காலி நோக்கி விசேட புகையிரம் ஒன்று சேவையில் ஈடுபடுத்தப்பட்டது.
சுனாமியின் போது விபத்துக்குள்ளான 'மெனிடோவா' புகையிரத எஞ்சின் காலை 06 மணிக்கு காலி நோக்கி சென்ற புகையிரதத்தில் இணைக்கப்படவில்லை. அந்த எஞ்சின் பழுதடைந்துள்ளதால் பிறிதொரு புதிய எஞ்சின் அதே எஞ்சினை போன்று வடிவமைத்து சேவையில் இணைக்கப்பட்டதாக புகையிரத திணைக்களம் குறிப்பிட்டது.
2004 ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி பேரழிவில், நாட்டில் 35இ000 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 5000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போனார்கள்.பல பில்லியன் கணக்கான மதிப்புள்ள சொத்துக்களும் அழிவடைந்தன.
2005 முதல் டிசம்பர் 26 ஒவ்வொரு ஆண்டும் 'தேசிய பாதுகாப்பு தினம்' என்று அறிவிக்கப்பட்டு அன்றிலிருந்து நாட்டில் சுனாமி பேரழிவிலும் பல்வேறு பேரழிவுகளிலும் இறந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில், தேசிய பாதுகாப்பு தின நினைவு நாள் பொதுமக்களின் பங்களிப்புடன் அனுஸ்டிக்கப்படுகிறது.
இந்த ஆண்டுஇ 'தேசிய பாதுகாப்பு' தின நிகழ்ச்சிக்காக தித்வா சூறாவளி காரணமாக நாட்டில் நிலவும் சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு மாவட்ட அளவில் அனைத்து மத நிகழ்ச்சிகளையும் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், நேற்று டிசம்பர் 26 'தேசிய பாதுகாப்பு தினத்தின்' முக்கிய நினைவு நாள் காலியில் உள்ள 'பேரலிய சுனாமி நினைவிடத்தில்' நடைபெறும். நேற்று காலை 8.30 மணி முதல் காலை 11 மணிவரை விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.
தேசிய பாதுகாப்பு தினமான நேற்று காலை 9.25 மணி முதல் காலை 9.27 மணி வரை நாடு முழுவதும் சுனாமி பேரழிவு மற்றும் பல்வேறு பேரிடர்களில் இறந்தவர்களை நினைவுகூரும் வகையில் இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துவதன் முக்கியத்துவத்தை பொதுமக்களுக்கு உணர்த்தும் வகையில் நேற்று விசேட நிகழ்வுகள் நடத்தப்பட்டன.





