வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய் தர்க்கம்
தையிட்டி விகாரை, போக்குவரத்து விடயங்கள், காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.
வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக்குழு கூட்டம் வலி.வடக்கு பிரதேச செயலக அபிவித்திக் குழுத்தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஸ்ரீபவானந்தராஜா தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தெல்லிப்பழை வைத்தியசாலையின் புற்றுநோய் சிகிச்சை பிரிவு மற்றும் வைத்தியசாலை ஆகியவற்றை மத்திய அரசின் கீழ் கொண்டு வந்து அதனை மேம்படுத்தி மக்களுக்கு சேவை வழங்குவது தொடர்பான தீர்மானம் எடுக்கப்பட்டது.
அத்துடன் தையிட்டி விகாரை, போக்குவரத்து விடயங்கள், காணிகளை விடுவித்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கஜேந்திரகுமார் பொன்னம்பலம் இருவருக்கும் இடையில் தெல்லிப்பழை புற்றுநோய் வைத்தியசாலை தொடர்பில் கடுமையான வாக்குவாதங்கள் இடம்பெற்றன.
அத்துடன் தையிட்டி விகாரை அமைந்துள்ள ஆணிகளை விடுவிக்க வேண்டும் என்ற விடயத்தில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் இராமநாதன் அர்ச்சுனா ஆகியோருக்கு இடையிலும் பலத்த வாக்குவாதங்கள் ஏற்பட்டன. குறிப்பாக இராமநாதன் அர்ச்சுனா, மிக கடுமையாக ஏக வசனங்களை பயன்படுத்தி கஜேந்திரகுமாரை சாடியமை குறிப்பிடத்தக்கது.





