Breaking News
கியூ.ஆர். முறைமையின் கீழான வாராந்த எரிபொருள் அதிகரிப்பு
மோட்டார் சைக்கிளுக்கு 5லீற்றரிலிருந்து 8லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டிக்கு 15லீற்றரிலிருந்து 20 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
கியூ.ஆர் முறைமையின் கீழ் எரிபொருள் வழங்கும் வீதத்தை நேற்று முதல் அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது.
இதன்படி மோட்டார் சைக்கிளுக்கு 5லீற்றரிலிருந்து 8லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது. முச்சக்கர வண்டிக்கு 15லீற்றரிலிருந்து 20 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேட்டார் காருக்கு 15லீற்றரிலிருந்து 25 லீற்றராக அதிகரிக்கப்பட்டுள்ளதோடு வான்களுக்கு 40 லீற்றரிலிருந்து 50 லீற்றராகவும், பஸ்களுக்கு 60லீற்றரிலிருந்து 100லீற்றராகவும் அதிகரிக்கப்பட்டுள்ளது. லொறிகளுக்கு 200 லீற்றர்களும் நிலம் மற்றும் விவசாய வாகனங்கள் 25லீற்றரிலிருந்து 40 லீற்றரும் அதிகரிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





