இந்திய பிரதமருக்கு ஜனாதிபதி அநுர நன்றி
உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து ஜனாதிபதி பதிவேற்றம் செய்துள்ளார்.
எரிபொருள் நெருக்கடிக்கு தீர்வாக இலங்கைக்கு துரிதமாக 38 ஆயிரம் மெற்றிக் தொன் எரிபொருளை வழங்கியமைக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளிவிவகாரத்துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்றித் தெரிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் நன்றி தெரிவித்து ஜனாதிபதி பதிவேற்றம் செய்துள்ளார். மத்திய கிழக்கு மோதலினால் இலங்கை எதிர்கொண்டுள்ள எரிபொருள் விநியோகத் தடைகள் குறித்து சில நாட்களுக்கு முன்னர் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியுடன் கலந்துரையாடினேன்.
இந்தியாவின் விரைவான ஆதரவிற்கு நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். நேற்று 38000 மெட்ரிக் தொன் எரிபொருள் கொழும்பை வந்தடைந்தது. இந்த விடயத்தில் ஒத்துழைப்பு இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ். ஜெய்சங்கருக்கும் மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பதிவேற்றம் செய்துள்ளார்.





