மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம்
இந்த திருத்த யோசனையை நடைமுறைப்படுத்தவேண்டாம் என அக்கடிதத்தின் ஊடாக மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கான அரசியலமைப்புத் திருத்த யோசனை பொருத்தமற்றாகும் எனக் குறிப்பிட்டு மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதமொன்றை அனுப்பிவைத்திருப்பதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நீதித்துறையின் கண்ணியத்தையும் சுயாதீனத்தன்மையையும் பாதுகாக்கவேண்டியதன் முக்கியத்துவத்தை கருத்திற்கொண்டு, இந்த திருத்த யோசனையை நடைமுறைப்படுத்தவேண்டாம் என அக்கடிதத்தின் ஊடாக மகாநாயக்க தேரர்கள் ஜனாதிபதியிடம் வலியுறுத்தியிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் முன்மொழிவு நீதித்துறை சார்ந்த சகல தரப்பினரதும் எதிர்ப்புக்கு உள்ளாகியிருக்கும் பின்னணியிலேயே மேற்கண்டவாறு சட்டத்தரணி ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார்.





