முன்னாள் ஜனாதிபதி ரணி லுடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்திப்பு
இலங்கை மற்றும் இந்தியாவுக்கும், பிராந்தியத்துக்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டுறவை ஆழப்படுத்துவது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் அவதானம் செலுத்தியுள்ளனர். உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை 25-02-2026 அன்று கொழும்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 'இலங்கையின் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார நிலப்பரப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் பிராந்தியத்திற்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் இந்தியா-இலங்கை கூட்டுறவை தொடர்ச்சியாக ஆழப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.' என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
இலங்கை மற்றும் இந்தியாவுக்கும், பிராந்தியத்துக்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் இரு நாடுகளுக்குமிடையிலான கூட்டுறவை ஆழப்படுத்துவது குறித்து முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் அவதானம் செலுத்தியுள்ளனர்.
உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை 25-02-2026 அன்று கொழும்பில் மரியாதை நிமித்தமாக சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
'இலங்கையின் வளர்ந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார நிலப்பரப்பு குறித்து இதன்போது கலந்துரையாடப்பட்டது. இரு நாடுகளுக்கும் பிராந்தியத்திற்கும் பரஸ்பர நன்மை கிடைக்கும் வகையில் இந்தியா-இலங்கை கூட்டுறவை தொடர்ச்சியாக ஆழப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.' என கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.





