தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ஜனாதிபதி அநுர வாழ்த்து
வலுவான இலங்கை - இந்திய பங்காளித்துவத்திற்குள் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இரு நாடுகளினதும் பெரும் செழிப்பையும், முன்னேற்றத்தைம் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய்க்கும், தமிழக மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க இலங்கை மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என ஜனாதிபதி அநுரகுமார வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.
வலுவான இலங்கை - இந்திய பங்காளித்துவத்திற்குள் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இரு நாடுகளினதும் பெரும் செழிப்பையும், முன்னேற்றத்தை காண தான் ஆவலுடன் காத்திருப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
ஜனாதிபதி தனது உத்தியோகபூர்வ எக்ஸ் வலைத்தளத்தில் வாழ்த்து செய்தியை பதிவேற்றம் செய்துள்ளார்.
இலங்கையும் தமிழ்நாடும் வரலாறு, கலாசாரம், வணிகம் மற்றும் தலைமுறைகளைக் கடந்து இரு நாட்டு மக்களின் உறவால் பிணைக்கப்பட்டுள்ளது.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான உறவுகள் மற்றும் வலுவான பங்காளித்துவம் மென்மேலும் வளர்ந்து வரும் நிலையில்,நமது எதிர்காலம் மிகப்பெரிய பொருளாதார முன்னேற்றத்தையும் நல்வாய்ப்புக்களையும் கொண்டுள்ளது.
வலுவான இலங்கை - இந்திய பங்காளித்துவத்திற்குள் இணைந்து பணியாற்றுவதன் மூலம், இரு நாடுகளினதும் பெரும் செழிப்பையும், முன்னேற்றத்தைம் காண நான் ஆவலுடன் காத்திருக்கிறேன்.
உங்களுக்கும் ( முதலமைச்சர்) தமிழக மக்களுக்கும் அனைத்து வெற்றிகளும் கிடைக்க இலங்கை மக்கள் சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.





