பயங்கரவாதத்துக்கு நிதியளிப்பதை ஒடுக்கம் சட்டமூலம் முரணானது அல்ல - உயர் நீதிமன்றம்
பாராளுமன்றத்தில் 19-05-2026 அன்று கூடிய அமர்வின்போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவித்தார்.
பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதைத் ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்) சட்டத்தின் எந்தவொரு ஏற்பாடுகளும் அரசியலமைப்புக்கு முரணானதல்ல, சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்றலாம் என உயர்நீதிமன்றம வியாக்கியானமளித்துள்ளதாக சபாநாயகர் ஜகத் விக்கிரமரத்ன சபைக்கு அறிவித்தார்.
பாராளுமன்றத்தில் 19-05-2026 அன்று கூடிய அமர்வின்போது உயர்நீதிமன்றத்தின் தீர்மானத்தை சபைக்கு அறிவித்தார்.
அவர் அங்கு மேலும் அறிவித்ததாவது: அரசியலமைப்பின் 121 (1) ஆம் பிரிவின் பிரகாரம், உயர் நீதிமன்றத்தில் சவாலுக்கு உட்படுத்தப்பட்ட 'பயங்கரவாதத்திற்கு நிதியளிப்பதை ஒடுக்குதல் மீதான சமவாய (திருத்தச்)' சட்டமூலம் தொடர்பில் உயர் நீதிமன்றத்தின் தீர்மானம் கிடைக்கப்பெற்றுள்ளது.
இந்தச் சட்டமூலம் அல்லது அதன் எந்தவொரு ஏற்பாடும் அரசியலமைப்பின் எந்தவொரு ஏற்பாட்டுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது. அதற்கமைய சட்டமூலத்தை சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றார்.





