தமிழ்நாட்டின் 20 பேரடங்கிய தொழிலதிபர் குழாம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் இலங்கை வருகிறது
வர்த்தகம், முதலீடு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, சுற்றுலா, விவசாயம், உணவு பதப்படுத்தல், உற்பத்தி மற்றும் தொழில் முயற்சி ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வதே இவ்விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
தமிழ்நாட்டில் உள்ள 20 தொழிலதிபர்கள் மற்றும் வணிகத்தலைவர்கள் 20 பேரை உள்ளடக்கிய குழுவினர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16 - 24 ஆம் திகதி வரை வர்த்தகத்துறைசார் தொடர்புகளை விரிவுபடுத்திக்கொள்ளும் நோக்கில் இலங்கைக்கு வருகைதரவுள்ளனர்.
சென்னையில் உள்ள இலங்கை துணை உயர்ஸ்தானிகர் கணேசநாதன் கேதீஸ்வரன், கோயம்பத்தூரில் உள்ள மில்லட் ஃபவுன்டேஷன் மற்றும் பிஸ்நெட் சொல்யூஷன் ஆகியவற்றின் நிர்வாகக் குழுவினரையும், திருச்சிராப்பள்ளியைச் சேர்ந்த ஜே.சி.ஐ நிர்வாகக்குழு உறுப்பினர்களையும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த முன்னணி தொழிலதிபர்களையும் கடந்த மாதம் 29 ஆம் திகதி சந்தித்துப் பேசினார்.
சுமார் 20 தொழிலதிபர்கள் மற்றும் வணிகத் தலைவர்களை உள்ளடக்கிய இந்தக் குழுவினர், எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 16 - 24 ஆம் திகதி வரை இலங்கைக்கு மேற்கொள்வதற்குத் திட்டமிட்டுள்ள வர்த்தகப் பயணம் குறித்து துணை உயர்ஸ்தானிகருக்கு விளக்கமளித்தனர்.
வர்த்தகம், முதலீடு, இறக்குமதி மற்றும் ஏற்றுமதி, சுற்றுலா, விவசாயம், உணவு பதப்படுத்தல், உற்பத்தி மற்றும் தொழில் முயற்சி ஆகிய துறைகளில் உள்ள வாய்ப்புக்கள் குறித்து ஆராய்வதே இவ்விஜயத்தின் முக்கிய நோக்கமாகும்.
இச்சந்திப்பின்போது மேற்குறிப்பிட்ட முயற்சி தொடர்பில் தனது வரவேற்பை வெளியிட்ட துணை உயர்ஸ்தானிகர், இலங்கையில் வளர்ந்துவரும் முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சாதகமான வணிகச்சூழல் என்பன பற்றி அவர்களுக்கு எடுத்துரைத்தார்.





