ஜூலை 31 இல் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பிரனாந்துவின் தீர்ப்பு
மேல் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த லியனகே , விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
உயிர்த்த ஞாயிறு பயங்கரவாத குண்டுத்தாக்குதல் தொடர்பில் முன்கூட்டியதாகப் புலனாய்வுத் தகவல்கள் கிடைத்தும், தாக்குதல்களைத் தடுப்பதற்கு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமை மற்றும் வேண்டுமென்றே கடமையை நிறைவேற்றத் தவறியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ள முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பிரனாந்துவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கின் தீர்ப்பை எதிர்வரும் ஜூலை மாதம் 31 ஆம் திகதி அறிவிப்பதாக கொழும்பு நிரந்தர மேல் நீதிமன்றத்தின் மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு அறிவித்துள்ளது.
மேல் நீதிமன்ற நீதிபதிகளான பிரியந்த லியனகே , விராஜ் வீரசூரிய மற்றும் திலகரத்ன பண்டார ஆகிய மூவரடங்கிய நீதிபதிகள் அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு நேற்று எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இத்தீர்மானம் அறிவிக்கப்பட்டது.
இதன்போது, பிரதிவாதியான ஹேமசிறி பிரனாந்து சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சமிந்த அத்துகோரல,தாக்குதல் நடத்தப்படலாம் என கிடைத்த தகவல், உறுதிப்படுத்தப்பட்ட ஒரு புலனாய்வு தகவல் அல்ல என முன்னாள் அரச புலனாய்வுப் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தன தமக்குக் கூறியதாக பிரதிவாதி கூண்டிலிருந்து வழங்கிய சாட்சியம், நிலந்த ஜயவர்தனவின் ஆரம்பகட்ட சாட்சியத்திலேயே உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
இத்தகவலை ஏனையோருக்கு அறியப்படுத்துமாறு பிரதிவாதி சிசிர மென்டிஸுக்கு அறிவித்திருந்தார். இவ்வழக்கில் 755 குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பிரதிவாதிக்கு எதிராகத் உதவி ஒத்தாசை புரிந்த குற்றச்சாட்டு மாத்திரமே சுமத்தப்பட்டுள்ளது. அவருக்குக் கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்படவில்லை. தாக்குதல் நடத்தியவர்களுடன் அவருக்கு எந்தத் தொடர்பும் இல்லை எனச் சுட்டிக்காட்டினார்.





