பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்டோருக்கு பெப்ரவரி 2ஆம் திகதிவரை விளக்கமறியல்
சந்தேநபர்களுக்காக மன்றில் ஆஜராகிய சட்டதரணிகள் ஊடாக, தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் நிரபராதிகள் என அவர்கள் தெரிவித்தனர்.
திருக்கோணமலை கடற்கரையோடு ஒட்டிய பகுதியில் சட்ட விரோதமாக புத்தர் சிலை ஒன்றினை பிரதிஷ்டை செய்தமை தொடர்பில் பலாங்கொடை கஸ்ஸபத் தேரர் உள்ளிட்ட, நான்கு தேரர்கள் மற்றும் சிவிலியன்களுக்கு எதிராக திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் 28-01-2026 அன்று பொலிஸாரால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திருகோணமலை துறைமுக பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் கையெழுத்துடன் இந்த குற்றப்பத்திரிகை நேற்று (28) முன்வைக்கப்பட்டது. தண்டனை சட்ட கோவை மற்றும் கரையோர பாதுகாப்பு கரையோர வள முகாமைத்துவ சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுகளை உள்ளடக்கியதாக இந்த குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது.
இந்நிலையில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் நிரபராதிகள் என பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட தரப்பினர் நேற்றைய தினம் நீதிமன்றில் தெரிவித்தனர்.
நேற்றைய தினம் இந்த விவகாரம் தொடர்பிலான வழக்கு திருகோணமலை நீதிவான் முகம்மத சம்சுதீன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது விளக்கமறியலில் உள்ள தேரர்கள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டனர்.
இதன்போது சந்தேநபர்களுக்காக மன்றில் ஆஜராகிய சட்டதரணிகள் ஊடாக, தமக்கு எதிராக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் தாம் நிரபராதிகள் என அவர்கள் தெரிவித்தனர்.
எவ்வாறாயினும் குறித்த தேரர்கள் உள்ளிட்ட சந்தேகநபர்கள் விளக்கமறியில் வைக்கப்பட்டுள்ளமைக்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றல் தாக்கல் செய்யப்பட்டுள்ள எழுத்தாணை மணு தொடர்பிலான தீர்மானம் எதிர்வரும் 30 ஆம் திகதி அறிவிக்கப்பட உள்ளது.
இந்த நிலையில் விளக்கமறிய அது குறித்த தீர்மானம் அறிவிக்கப்பட உள்ளதால் பிணை தொடர்பிலான எந்த மேலதிக உத்தரவுகளும் நேற்று நீதிவான் நீதிமன்றால் பிறப்பிக்கப்படவில்லை.
இந்த நிலையில் இந்த வழக்கானது எதிர்வரும் பெப்ரவரி 2 ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில் அதுவரையில் சந்தேகநபர்கள் அனைவரையும் விளக்கமறியலில் வைக்க நீதிவான் உத்தரவிட்டார்.





