கறுப்பு இராச்சியத்தை இல்லாதொழிக்க தீர்மானித்துள்ளேன்: ஜனாதிபதி அநுர
அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட ஆட்சியையும், நாட்டையும் பாதுகாப்பதற்கு கறுப்பு இராச்சியத்தை இல்லாதொழிக்க தீர்மானித்துள்ளேன்.
அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட ஆட்சியையும், நாட்டையும் பாதுகாப்பதற்கு கறுப்பு இராச்சியத்தை இல்லாதொழிக்க தீர்மானித்துள்ளேன். நாட்டுக்காக எடுத்துள்ள கடுமையான தீர்மானங்களை எக்காரணிகளுக்காகவும் கைவிட போவதில்லை என்று மாநயக்கர்களுக்கு சத்தியமளிக்கிறேன்.போதைப்பொருள் மற்றும் பாதாள குழுக்களை இல்லாதொழிக்காமல் சமூகத்தை கட்டியெழுப்ப முடியாதென ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.
கண்டி ஸ்ரீ தலதா மாளியை வளாகத்தில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மகுல் மடுவ சபா மண்டபத்தில் 3-10-2025 அன்று நடைபெற்ற சன்னஸ் பத்திரம் வழங்கும் நிகழ்வில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
சியாம் மகா நிகாயத்தின் அஸ்கிரி பீடத்தின் புதிய அனுநாயக்கராக நியமிக்கப்பட்டுள்ள, வணக்கத்துக்குரிய நாரம்பனாவே ஆனந்த தேரருக்கு ஜனாதிபதி, சன்னஸ் பத்திரத்தை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி, சமூகம் பல நெருக்கடிகளை எதிர்கொண்டுள்ளது.வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தை மீள கட்டியெழுப்ப முடியும். ஆனால் சமூகம் முழுமையாக வீழ்ச்சியடைந்தால் குறுகிய காலக்கட்டத்துக்குள் கட்டியெழுப்ப முடியாது.
எமது சமூகம் பல்வேறு வழிமுறைகளில் வீழ்ச்சியடைந்துள்ளது. ஆகவே சமூகத்துக்கு புதிய திருப்புமுனை ஒன்று அவசியமாகவுள்ளது. சமூகத்தின் தேவை தொடர்பில் ஆராய வேண்டியுள்ளது. அரசியலமைப்பினால் வழங்கப்பட்டுள்ள பொறுப்பு மற்றும் கடமைகளுக்கு அமைவாக நாங்கள் செயற்படுகிறோம்.
சமூகத்தை கட்டியெழுப்பவும், நல்வழிப்படுத்தவும் மத தலைவர்களுக்கும், மகாநாயக்க தேரர்களுக்கும் பாரியதொரு பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.சமூக கட்டமைப்பை தீவிரமாக ஆராய்ந்து பார்த்தால் பல பிரச்சினைகள் மற்றும் வீழ்ச்சியினை விளங்கிக்கொள்ள முடியும்.
நாட்டில் அரசியலமைப்பின் ஊடாக அரசாங்கம் ஒன்று ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.இதற்கு மாற்றீடாக வரையறுக்கப்பட்ட அதிகாரங்களுடன் கறுப்பு இராச்சிய கட்டமைப்பும் உள்ளது. சட்டத்தால் உருவாக்கப்பட்ட பொலிஸ், குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், மோட்டார் வாகன திணைக்களம் ஆகியவற்றை போன்று கறுப்பு இராச்சியத்திலும் இந்த நிறுவனங்கள் உள்ளன.
கறுப்பு இராச்சியம் இருக்கட்டும் என்று குறிப்பிட்டுக்கொண்டு எமது ஆட்சியை முன்னெடுத்துச் செல்ல வேண்டும். அல்லது அரசியலமைப்பு ரீதியிலான ஆட்சியை கைவிட்டு விட்டு அனைவரும் கறுப்பு இராச்சியத்துக்கு செல்ல வேண்டும். இல்லாவிடின் அரசியலமைப்பு ரீதியில் உருவாக்கப்பட்ட ஆட்சியை பாதுகாப்பதற்கு கறுப்பு இராச்சியத்தை இல்லாதொழிக்க வேண்டும்.
அரசியலமைப்பால் உருவாக்கப்பட்ட ஆட்சியையும், நாட்டையும் பாதுகாப்பதற்கு கறுப்பு இராச்சியத்தை இல்லாதொழிக்க தீர்மானித்துள்ளேன்.தேசியத்தை பாதுகாப்பதற்கு எடுத்துள்ள தீர்மானங்களை எக்காரணிகளுக்காகவும் கைவிட போவதில்லை என்று மகாநாயகர்களுக்கு சத்தியமளிக்கிறேன்.
கறுப்பு இராச்சியத்தால் இந்த சமூகத்துக்கு ஏற்பட்ட விளைவுகளை நாளாந்தம் வெளியாகும் செய்திகள் ஊடாக விளங்கிக்கொள்ளலாம். சமூகத்தை சீர் செய்ய வேண்டுமாயின் இந்த கறுப்பு இராச்சியத்தை முடிவுக்கு கொண்டு வர வேண்டும்.
அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளேன் என்று குறிப்பிட்டுக்கொள்கிறேன்.போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் வியாபாரத்தில் ஈடுபட்டவர்கள் பழைய பழக்கத்தில் இருந்து விலகிக் கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றார்.





