பௌதிக விஞ்ஞானப் பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தேவேந்திரன் திருக்குமரன் சாதனை
பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த வணிகசூரிய ஆரச்சிகே தொன் ஹேஷான் அணுஜய வணிகசூரிய (இசட் புள்ளி: 3.5158) முதலிடத்தை பெற்றுள்ளார்.
கல்வி பொது தராதர உயர்தர பரீட்சை (2025) பெறுபேறுகள் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன. அதற்கமைய பௌதிக விஞ்ஞானப் பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலய மாணவன் தேவேந்திரன் திருக்குமர னும் வர்த்தகப் பிரிவில் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலய மாணவன் முஹம்மது சுபைதீன் முஹம்மது ஃபர்தான் ஆகியோர் தேசிய ரீதியில் முதலிடத்தினைப் பெற்றுள்ளனர்.
இந்நிலையில் அகில இலங்கை ரீதியாக தேசிய ரீதியில் சாதனை படத்துள்ளவர்களின் விபரங்கள் வருமாறு:
பௌதிக விஞ்ஞானப் பிரிவு
பௌதிக விஞ்ஞானப் பிரிவில் கிளிநொச்சி மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த தேவேந்திரன் திருக்குமரன் (இசட் புள்ளி: 2.9400) முதலிடத்தையும், குருநாகல் மலியதேவ ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த கம்லத்கெதர தருஷ கிம்ஹான கம்லத் (இசட் புள்ளி: 2.8482) இரண்டாம் இடத்தையும், பாணந்துறை ஸ்ரீ சுமங்கல ஆண்கள் கல்லூரியைச் சேர்ந்த விதானலாகே வினுர பிரசாத் டி மெல் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
உயிரியல் பிரிவு
உயிரியல் பிரிவில் கொழும்பு றோயல் கல்லூரியைச் சேர்ந்த டிலான் சஞ்சன கருணாரத்ன (இசட் புள்ளி: 2.9289 முதலிடத்தையும், ஹொரண தக்சிலா மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கமகே தொன் கிரிஷான் சசிந்து நிம்தர (இசட் புள்ளி: 2.9112) இரண்டாம் இடத்தையும், திருகோணமலை ஸ்ரீ சண்முகா இந்து மகளிர் கல்லூரியைச் சேர்ந்த தர்ஷனா கோனேஷ் மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
வர்த்தகப் பிரிவு
வர்த்தகப் பிரிவில் காத்தான்குடி மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த முஹம்மது சுபைதீன் முஹம்மது ஃபர்தான் (இசட் புள்ளி: 3.0412) முதலிடத்தையும், கொழும்பு மியூசியஸ் கல்லூரியைச் சேர்ந்த திஸாநாயக்க முதியன்சலாகே செனாதி திஹஸ்னா சுமனசேகர (Z-Score : 2.8990) இரண்டாம் இடத்தையும், கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த குருந்துகாரகே திலீப சந்தரஸ் கருணாரத்ன (இசட் புள்ளி: 2.8948) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
கலைப்பிரிவு
கலைப்பிரிவில் குருநாகல் றோயல் கல்லூரியைச் சேர்ந்த மாரசிங்க பத்திரணகே அசிந்த மிஹிரங்க ரத்நாயக்க (இசட் புள்ளி: 3.2403) முதலிடத்தையும், கொழும்பு தேவி பாலிகா வித்தியாலயத்தைச் சேர்ந்த ஆலியா ஜைனப் குலூசி (இசட் புள்ளி: 3.1436) இரண்டாம் இடத்தையும், கொழும்பு மியூசியஸ் கல்லூரியைச் சேர்ந்த மெதுசாரி தினெத்யா ரணதுங்க (இசட் புள்ளி: 2.8775) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
பொறியியல் தொழில்நுட்பப் பிரிவு
பொறியியல் தொழில்நுட்பப் பிரிவில் கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியைச் சேர்ந்த வணிகசூரிய ஆரச்சிகே தொன் ஹேஷான் அணுஜய வணிகசூரிய (இசட் புள்ளி: 3.5158) முதலிடத்தையும், மஹாவ விஜயபா தேசிய பாடசாலையைச் சேர்ந்த யாப்பா முதியன்சேலாகே சிதி துலான் பண்டார (இசட் புள்ளி: 3.3552) இரண்டாம் இடத்தையும், மத்துகம சி.டபிள்யு.டபிள்யு. கன்னங்கரா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த மகாராஜ பத்திரகே ரிவீன் பின்சர (இசட் புள்ளி: 3.3206) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளனர்.
உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவு
உயிரியல் முறைமைகள் தொழில்நுட்பப் பிரிவில் வேயங்கொட பண்டாரநாயக்க மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விஜயரத்ன முதியன்சேலாகே தோன இஷானி மனோத்யா (இசட் புள்ளி: 3.3638) முதலிடத்தையும், கம்பஹா ரத்னாவளி பாலிகா மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த கந்தேதே ஆரச்சிகே இமாஷி விஹங்கா (இசட் புள்ளி: 2.8585) இரண்டாம் இடத்தையும், இப்பாகமுவ மத்திய மகா வித்தியாலயத்தைச் சேர்ந்த விஜயசிங்க ரத்நாயக்க முதியன்சேலாகே ஜயத்மா அமந்தி விஜேசிங்க (இசட் புள்ளி: 2.7618) மூன்றாம் இடத்தையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





