சீன உளவாளிப் பெண்ணுடன் தொடர்பு வைத்திருந்த என்விடியா தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங் மீது விசாரணை தொடக்கம்
நிறுவனத்தின் இயக்குநர் குழு மேற்கொள்ளும் சுயாதீன விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
என்விடியா நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி ஜென்சன் ஹுவாங், சீனாவுக்காக உளவு பார்த்ததாக அமெரிக்க உளவுத்துறை சந்தேகிக்கும் சீனத் தொழிலதிபர் ஆலிஸ் ஹுவாங்குடன் தனிப்பட்ட உறவு வைத்திருந்ததை ஒப்புக்கொண்டுள்ளார்.
இதற்காக தனது குடும்பத்தினரிடம் மன்னிப்புக் கோரிய அவர், தேசியப் பாதுகாப்பு தொடர்பான கவலைகள் எழுந்துள்ள நிலையில், நிறுவனத்தின் இயக்குநர் குழு மேற்கொள்ளும் சுயாதீன விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிப்பதாக உறுதியளித்துள்ளார்.
சீனாவுக்கு ஏற்றுமதி செய்யக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள செயற்கை நுண்ணறிவுச் சில்லுகளைப் பெறுவதற்கு உதவியதாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள சிங்கப்பூரைச் சேர்ந்த நிறுவனத்துடன் ஆலிஸ் ஹுவாங் கொண்டுள்ள தொடர்புகள், அமெரிக்க அரசு மற்றும் நாடாளுமன்றத்தின் கவனத்தை மேலும் ஈர்த்துள்ளன.
குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள போதிலும், என்விடியா நிறுவனத்துக்கும் அதன் தலைமைக்கும் அரசியல் தலைவர்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இருப்பினும், இந்த விசாரணை நிறுவனத்தின் எதிர்காலத்துக்கும் 4.5 லட்சம் கோடி டாலர் சந்தை மதிப்புக்கும் புதிய இடர்களை ஏற்படுத்தியுள்ளது.





