எயர்பஸ் கொள்வனவு விவகாரம்; நாமல் ராஜபக்ஷவுக்கு பிணை
இந்த வழக்கையும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் ஒன்றிணைப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.“
ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் நிறுவனத்துக்கு எயார்பஸ் கொள்வனவு செய்யப்பட்ட சம்பவத்தின் போது இடம்பெற்ற சர்ச்சைக்குறிய கொடுக்கல் வாங்கல் தொடர்பில், ஊழல் குற்றச்சாட்டின் கீழ் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் விடுவிக்குமாறு கோட்டை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அதற்கமைய சந்தேகநபரை 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், தலா 100 மில்லியன் ரூபா பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளிலும் விடுவிக்குமாறு கோட்டை நீதவான் உத்தரவிட்டார்.
மேலும் சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்ல பயணத்தடை விதிக்கப்பட்டதுடன், அது தொடர்பில் குடிவரவு குடியகல்வுக்கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்குமாறும் உத்தரவிடப்பட்டது. அத்துடன் சாட்சியாளர்களுக்கு அழுத்தம் பிரயோகிப்பதில் இருந்து விலகியிருக்குமாறு பிணை நிபந்தனையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேற்படி வழக்கு கோட்டை நீதிவான் பசன் அமரசேன முன்னிலையில் 30-09-2026 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
கடந்த முறை இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவின் பிணை கோரிக்கையை பரிசீலிப்பதற்காக மூன்று விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு நீதிவான் அறிவித்திருந்தார்.
அதற்கமைய கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கும், கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள இலஞ்ச ஊழல் வழக்கும் ஒன்றிணைக்கப்படுமா? இந்த வழக்கை கொழும்பு நீதிவான் நீதிமன்றத்திற்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படுமா? மற்றும் இச்சம்பவம் தொடர்பில் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆவது பிரிவின் கீழ் உறுதிப்படுத்தல் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளாரா? ஆகிய விடயங்கள் தொடர்பில் தெளிவுபடுத்துமாறு அந்த உத்தரவில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதற்கமைய, வழக்கு நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டபோது குற்றப்புலனாய்வு திணைக்களம் சார்பில் மன்றில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் விடயங்களை முன்வைக்கையில்,“கனம் நீதிவான் அவர்களே.,. கடந்த வழக்கு விசாரணையின் போது தங்களது நீதிமன்றத்தினால் அனுப்பப்பட்ட மூன்று விடயங்கள் தொடர்பில் விளக்கமளிக்க நான் எதிர்பார்க்கின்றேன். அதற்கமைய, இந்த வழக்கையும் கொழும்பு நீதிவான் நீதிமன்றத்தில் உள்ள வழக்கையும் ஒன்றிணைப்பது தொடர்பில் இதுவரை எவ்வித தீர்மானமும் எடுக்கப்படவில்லை.“
“புலனாய்வு அதிகாரிகள் அவுஸ்திரேலியாவுக்குச் சென்று அங்குள்ள இலங்கைத் தூதரகத்தில் வைத்து அந்தச் சாட்சியாளரின் சாட்சியத்தைப் பதிவு செய்ய வேண்டியிருந்தது. அவுஸ்திரேலியாவில் கூட அவருக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதாகத் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கும் இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கும் அறிக்கைகளை வழங்கியுள்ளார்.





