Breaking News
கனடாவின் பழங்குடியின மொழிகளுக்கு புதிய ஆணையராக டொரோத்தி மையோ நியமனம்
க்ரீ (Cree), சால்டோ (Saulteaux) ஆகிய இரு பழங்குடியின மொழிகளிலும் அவர் பேசும் திறன் பெற்றுள்ளார்.
கனடாவின் பழங்குடியின மொழிகளுக்கான புதிய ஆணையராக டொரோத்தி மையோ நியமிக்கப்பட்டுள்ளார். ஆணையத்தின் செயல்பாடுகள் மற்றும் நிதி மேலாண்மை தொடர்பாக கேள்விகள் எழுந்துள்ள சூழலில், அவர் இந்தப் பொறுப்பை ஏற்றுள்ளார்.
சஸ்காட்சுவான் மாகாணத்தில் உள்ள சால்டோ பழங்குடியினச் சமூகத்தில் வளர்ந்தவர் டொரோத்தி மையோ. அவரது லிங்க்ட்இன் சுயவிவரத்தின்படி, க்ரீ (Cree), சால்டோ (Saulteaux) ஆகிய இரு பழங்குடியின மொழிகளிலும் அவர் பேசும் திறன் பெற்றுள்ளார்.
மத்திய அரசு மற்றும் மாகாண அளவில் செயல்படும் பல்வேறு பழங்குடியின அமைப்புகளில் அவர் ஏற்கெனவே உயர் பொறுப்புகளை வகித்துள்ளார். குறிப்பாக, சஸ்காட்சுவான் பழங்குடியினக் கலாசார மையத்தின் தலைவராகவும் பணியாற்றிய அனுபவம் அவருக்கு உள்ளது.





