உணவு பாதுகாப்பு விதிமுறைகளை மீறிய 3 சீன உணவு நிறுவனங்களுக்கு அபராதம்
அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களில், கொழும்பிலுள்ள பிரபல வணிக வளாகமொன்றினுள் இயங்கி வரும் இரண்டு சீன உணவகங்களும், ஒரு ஐஸ்கிரீம் நிறுவனமும் உள்ளடங்குகின்றன.
உணவு பாதுகாப்பு விதிமுறைகளை 148 தடவைகள் மீறிய குற்றச்சாட்டில், கொழும்பில் இயங்கி வரும் மூன்று சீன உணவு நிறுவனங்களுக்கு மொத்தமாக 444,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்களால் முன்னெடுக்கப்பட்ட சோதனைகளின் அடிப்படையில், மாநகர சபையினால் முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதத் தொகை நேற்று முன்தினம் விதிக்கப்பட்டது.
அபராதம் விதிக்கப்பட்ட நிறுவனங்களில், கொழும்பிலுள்ள பிரபல வணிக வளாகமொன்றினுள் இயங்கி வரும் இரண்டு சீன உணவகங்களும், ஒரு ஐஸ்கிரீம் நிறுவனமும் உள்ளடங்குகின்றன.
உணவுப் பாதுகாப்பு விதிமீறல்கள் தொடர்பான 120 குற்றச்சாட்டுகளில் குற்றவாளிகளாகக் காணப்பட்ட குறித்த இரண்டு சீன உணவகங்களுக்கும் கூட்டாக 360,000 ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
பொதுச் சுகாதாரப் பரிசோதகர்கள் மேற்கொண்ட திடீர் சோதனைகளின் போது, உரிய பெயர்ச்சிட்டைகளின்றி இறக்குமதி செய்யப்பட்ட உணவுப் பொருட்கள் விற்பனை செய்யப்பட்டமையும், நுகர்வுக்காகப் பயன்படுத்தப்பட்டமையும் கண்டறியப்பட்டுள்ளது.
அத்துடன், அவ்வுணவகங்களில் காலாவதியான உணவுப் பொருட்களின் இருப்புக்களும் கைப்பற்றப்பட்டன. இதயைடுத்து குறித்த உணவகங்களை நடத்திச் செல்லும் நிறுவனங்களுக்கு எதிராகக் கொழும்பு மாநகர சபை சட்ட நடவடிக்கைகளை முன்னெடுத்தது.
அதன்பிரகாரம், மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் மேற்படி இரண்டு நிறுவனங்களுக்கும் ஐஸ்கிரீம் நிறுவனத்துக்கும் 148 உணவு பாதுகாப்பு விதிமீறல் குற்றச்சாட்டுகளுக்காக மொத்தமாக 444,000 ரூபா அபராதம் விதித்தமை குறிப்பிடத்தக்கது.





