மின்கட்டண திருத்தம் தொடர்பான இறுதி தீர்மானம் அடுத்த வாரம்
நாட்டின் 8 மாகாணங்களிலிருந்து பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், 500க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த மின்சார கட்டண திருத்த முன்மொழிவு குறித்த இறுதி தீர்மானத்தை எதிர்வரும் வாரம் அறிவிப்பதாக இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அறிவித்துள்ளது.
மின்கட்டணம் திருத்தம் தொடர்பில் இலங்கை மின்சார சபை 6 சதவீத மின்கட்டணண அதிகரிப்பை கோரி கடந்த மாதம் இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவுக்கு யோசனை முன்வைத்திருந்தது.
இதற்கமைய மின்கட்டண திருத்தம் தொடர்பில் கிழக்கு மாகாணத்தில் வாய்மூல கருத்து பெறுதலை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கடந்த மாதம் (செப்டம்பர்) 18 அன்று ஆரம்பித்தது.
நாட்டின் 8 மாகாணங்களிலிருந்து பொதுமக்களின் கருத்துகள் பெறப்பட்டுள்ள நிலையில், 500க்கும் மேற்பட்டோர் இதில் பங்கேற்றுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
மேல் மாகாணத்தை மையமாகக் கொண்மு பொதுமக்களின் கருத்து கோரல் இறுதி அமர்வு எதிர்வரும் 8 அன்று நடத்தப்பட உள்ளதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களின் கருத்துகளை ஆய்வு செய்து வரும் நிலையில், மின்சார சபை எரிபொருள் வாங்குவதற்கான செலவு, மின் உற்பத்தி நிலைய செலவு,விநியோக செலவு, மற்றும் கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கான நிதி ஆகியவற்றையும் பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு கவனத்தில் கொண்டுள்ளது.





