அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ தற்கொலை ?
அவர் வீட்டினுள் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோ மர்மமான முறையில் உயிரிழந்த நிலையில் பொலிஸாரல் சடலமாக மீட்கப்பட்டுள்ளாரை்.
எராஜ் பெர்னாண்டோவின் உடல் தூக்கில் தொங்கியவாறு மீட்கப்பட்டிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
பம்பலப்பிட்டி பகுதியில் அமைந்துள்ள மாடிக்குடியிருப்பொன்றில் பொலிஸ் நிலையத்துக்கு வழங்கப்பட்ட தகவலுக்கமைய சம்பவ இடத்துக்கு விரைந்த பொலிஸார் அம்பாந்தோட்டை மாநகர சபையின் முன்னாள் மேயர் எராஜ் பெர்னாண்டோவின் உடலை மீட்டு விசாரணைகளை ஆரம்பித்திருந்தனர். அவர் வீட்டினுள் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என விசாரணை அதிகாரிகள் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.
57 வயதான எராஜ் பெர்னாண்டோ, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் போட்டியிட்ட இவர் 2014 ஆம் ஆண்டு மாநகர சபை மேயராக தெரிவு செய்யப்பட்டதுடன், 2018 ஆம் ஆண்டு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஆதரவுடன் இரண்டாவது முறையாகவும் அம்பாந்தோட்டை மாநகர சபையின் மேயராக பதவியேற்றிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.





