ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி.க்கள் - இந்திய உயர்ஸ்தானிகருக்கிடையில் சந்திப்பு
'ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹசிம், எஸ் எம் மரிக்கார், மற்றும் எரான் விக்ரமரட்ண ஆகியோரை உயர் ஸ்தானிகர் சந்தித்தார்.
நாட்டின் தற்போதைய அரசியல் நிலைவரங்கள் மற்றும் இந்திய இலங்கை பங்குடைமையின் பங்வேறு பரிமானங்கள் தொடர்பில் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ; ஜா மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கிடையில் விசேட கலந்துரையாடலொன்று இடம்பெற்றுள்ளது.
இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ; ஜா மற்றும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான எரான் விக்கிரமரத்ன, கபீர் ஹசீம் மற்றும் எஸ்.எம்.மரிக்கார் ஆகியோருக்கிடையில் கொழும்பில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இந்த சந்திப்பின் போதே இவ்விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.
'ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கபீர் ஹசிம், எஸ் எம் மரிக்கார், மற்றும் எரான் விக்ரமரட்ண ஆகியோரை உயர் ஸ்தானிகர் சந்தித்தார். இலங்கையின் அரசியல் நிலவரங்கள் மற்றும் இந்திய இலங்கை பங்குடைமையின் பல்வேறு பரிமாணங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டது.' கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவின் அண்மைய இந்திய விஜயத்தையடுத்து இந்திய உயர்ஸ்தானிகருக்கும், ஐக்கிய மக்கள் சக்தியின் எம்.பி.க்களுக்குமிடையில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.





