தையிட்டி விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்; பலர் கைது
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்று காலை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளனர். தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா 21-12-2025அன்று புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் வழங்கப்படவுள்ளது. அதேவேளை தையிட்டி விகாரைக்கு முன்பாக "இதொரு சட்டவிரோதமான விகாரை" என மும்மொழிகளில் அறிவித்தல் பலகை நாட்டுவது எனவும், விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெறப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டு, போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெறப்பட்டுள்ளது. இந்நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளை, விகாரையை அண்மித்த சூழலில் பெருமளவான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன் அப்பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டது. இது ஒரு அமைதிவழி போராட்டம், இங்கு எந்த விதத்திலும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவில்லை. விகாரைக்கு சேதம் விளைவிக்கவில்லை. விகாரைக்கு செல்லும் வீதியில் நீங்கள் எவ்வாறு அத்துமீறி மறித்து வைத்திருப்பீர்கள் என பொலிஸாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், வேலன் சுவாமிகள், வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரைக்காக அடாத்தாக கையகப்படுத்தப்பட்டுள்ள தனியார் காணிகளை விடுவிக்குமாறும், விகாரையின் விகாராதிபதிக்கு வழங்கப்படும் கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், இன்று விகாரை முன்பாக போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
தையிட்டி சட்டவிரோத விகாரைக்கு முன்பாக இன்று காலை வலி. வடக்கு பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் காணி உரிமையாளர்கள் போராட்டத்தை முன்னெடுக்கப்பட்டுள்ளனர்.
தையிட்டி திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி ஜின் தோட்டை நந்தாராம தேரருக்கு வழங்கப்படவுள்ள அமரபுர ஶ்ரீ கல்யான வம்ச குழுவின் வட இலங்கை துணை தலைமை சங்கநாயக பதவிக்கான ஸ்ரீ சன்னாஸ் சான்றிதழ் மற்றும் விஜின் சான்றிதழ் வழங்கும் விழா 21-12-2025அன்று புத்தசாசன சமயம் மற்றும் கலாச்சார அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி தலைமையில் வழங்கப்படவுள்ளது.
அதேவேளை தையிட்டி விகாரைக்கு முன்பாக "இதொரு சட்டவிரோதமான விகாரை" என மும்மொழிகளில் அறிவித்தல் பலகை நாட்டுவது எனவும், விகாராதிபதிக்கு வழங்கப்படவுள்ள கௌரவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்திற்கு எதிராக நீதிமன்றில் தடையுத்தரவை பெறப்பட்டுள்ளது. இதன்படி, பாராளுமன்ற உறுப்பினர்கள், அரசியல்வாதிகள் உள்ளிட்ட 29 பேருக்கு எதிராக பெயர் குறிப்பிட்டு, போராட்டத்தில் அவர்கள் கலந்து கொள்ள தடையுத்தரவை பெறப்பட்டுள்ளது.
இந்நிலையில் போராட்டம் முன்னெடுக்கப்பட்ட வேளை, விகாரையை அண்மித்த சூழலில் பெருமளவான பொலிஸார் மற்றும் கலகம் அடக்கும் பொலிஸார் குவிக்கப்பட்டிருந்ததுடன், அவர்களுக்கும் போராட்டக்காரர்களுக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டதுடன் அப்பகுதியில் கடும் பதற்ற நிலை ஏற்பட்டது.
இது ஒரு அமைதிவழி போராட்டம், இங்கு எந்த விதத்திலும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கப்படவில்லை. விகாரைக்குள் போராட்டக்காரர்கள் செல்லவில்லை. விகாரைக்கு சேதம் விளைவிக்கவில்லை. விகாரைக்கு செல்லும் வீதியில் நீங்கள் எவ்வாறு அத்துமீறி மறித்து வைத்திருப்பீர்கள் என பொலிஸாருடன் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தர்க்கத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டிருந்த வலி.கிழக்கு பிரதேச சபை தவிசாளர் தியாகராசா நிரோஷ், வேலன் சுவாமிகள், வலி. வடக்கு பிரதேச சபையின் உறுப்பினர்கள் உள்ளிட்டவர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டனர்.





