பேரிடரின்போது உதவிய வெளிநாட்டு போர் கப்பல்களுக்கு பிரணாமம்
எதிர்பாராத விதமாக, ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக எழுந்த தேசிய அனர்த்த சூழ்நிலை காரணமாக, நாட்டுக்கு வந்த போர்க்கப்பல்கள் மனிதாபிமான உதவிகளை வழங்கின.
பாதுகாப்பான கடல்சார் பிராந்தியத்திற்கான உலகளாவிய மற்றும் பிராந்திய ஒத்துழைப்பையும் கூட்டுப் பொறுப்பையும் வெளிப்படுத்தும் வகையில், இலங்கை கடற்படையின் 75ஆவது ஆண்டு நிறைவையொட்டி நடைபெற்ற சர்வதேச கப்பல் கண்காணிப்பிற்காக வந்த வெளிநாட்டுப் போர்க்கப்பல்களுக்கு, தீவில் தேசிய பேரிடரின் போது மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகளில் உதவியதற்காக பிரணாமம் தெரிவித்தல், 2025 ஆம் ஆண்டுக்கான சர்வதேச போர்க்கப்பல் கண்காணிப்பின் போது காலி முகத்திடலில் உள்ள மேற்குக் கடலில் தெரிவிக்கப்பட்டது.
இந்த சந்தர்ப்பத்திற்காக இலங்கை அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி 01-01-2026 அன்று பங்கேற்ற இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள், இலங்கை கடற்படைக் கப்பலான கஜபாகுவில் இருந்த போர்க்கப்பல்களிடமிருந்து பாரம்பரிய கடற்படை மரியாதையைப் பெற்றார்.
“வலுவாக இணைந்து பயணித்தல்; ஒருங்கிணைப்பு மூலம் பாதுகாப்பான மற்றும் நிலையான கடல் மண்டலம்" என்ற கருப்பொருளின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய கடற்படை போர்க்கப்பல் கண்காணிப்பில் பங்கேற்க, பங்களாதேஷ் கடற்படையின் ‘புரோட்டோய்’ போர்க்கப்பல், இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ். விக்ராந்த் மற்றும் ஐ.என்.எஸ். உதயகிரி போர்க்கப்பல், ஈரானின் ‘ஐரிஸ் நாக்தி’ போர்க்கப்பல், மாலைத்தீவு ‘சிஜிஎஸ் ஹுரவி’ கடலோர காவல்படை கப்பல், மலேசிய கடற்படையின் ‘கே.டி. தெரெங்கானு’ போர்க்கப்பல், பாகிஸ்தான் கடற்படையின் ‘பி.என்.எஸ். சைப்’ போர்க்கப்பல் மற்றும் ரஷ்ய கடற்படையின் ‘ரேமியாஷ்சி’ போர்க்கப்பல் ஆகிய 08 போர்க்கப்பல்கள் 2025 நவம்பர் 27 ஆம் திகதி கொழும்பை வந்தடைந்தன.
எதிர்பாராத விதமாக, ஏற்பட்ட பாதகமான வானிலை காரணமாக எழுந்த தேசிய அனர்த்த சூழ்நிலை காரணமாக, நாட்டுக்கு வந்த போர்க்கப்பல்கள் மனிதாபிமான உதவிகளை வழங்கின.
நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வந்த அனர்த்த நிவாரண நடவடிக்கையை வலுப்படுத்தின. குறிப்பாக, இந்திய கடற்படையின் விமானம் தாங்கி கப்பலான ஐ.என்.எஸ்.விக்ராந்த் மற்றும் பாகிஸ்தான் கடற்படையின் போர்க்கப்பலான 'பி.என்.எஸ்.சைப்' ஆகியவற்றின் உலங்கு வானூர்திகள் பாதிக்கப்பட்ட மக்களைத் தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் பங்களித்தன.
அதன்படி, ஒவ்வொரு நாட்டையும் பிரதிநிதித்துவப்படுத்தும் போர்க்கப்பல்கள், போர்க்கப்பல் கண்காணிப்பில் பங்கேற்று, பெருமைமிக்க கடற்படை மரபுகளை பிரதிபலித்து, இலங்கைக்கும் இலங்கை கடற்படைக்கும் மரியாதை செலுத்தியது மட்டுமல்லாமல், கடல் பிராந்தியத்தில் பாரம்பரியமற்ற கடல்சார் சவால்களையும், காலநிலை மாற்றத்தால் ஏற்படும் இயற்கை பேரழிவுகளையும் கூட்டு அணுகுமுறையுடன் சமாளிக்கத் தேவையான ஒத்துழைப்பு மற்றும் கூட்டாண்மையை மேலும் வலுப்படுத்தின.
இலங்கையில் உள்ள பங்களாதேஷ், இந்தியா, ஈரான், மாலைத்தீவு, மலேசியா, பாகிஸ்தான் மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகளின் உயர் ஸ்தானிகரகங்கள் மற்றும் தூதரகங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் இராஜதந்திர அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டதுடன், இலங்கையில் தேசிய அனர்த்த சூழ்நிலையை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட மனிதாபிமான உதவி மற்றும் அனர்த்த நிவாரண நடவடிக்கைகளுக்கு ஆதரவளித்ததற்காக இராஜதந்திர அதிகாரிகளுக்கு பிரதமர் தனது நன்றியை தெரிவித்தார்.





