பேருந்து கட்டணம் 12 சதவீதத்தால் அதிகரிப்பு - புதிய கட்டண அதிகரிப்பு ஜூலை 05 முதல் அமல்
புதிய கட்டண அதிகரிப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
வருடாந்த கட்டணத் திருத்தத்துக்கமைய பேருந்து கட்டணத்தை 12 சதவீதத்தால் அதிகரிப்பதற்கு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது.இதற்கமைய புதிய கட்டண அதிகரிப்பு எதிர்வரும் 5 ஆம் திகதி நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.
சாதாரண சேவையின் அடிப்படையில், 100 கிலோமீற்றருக்கும் குறைந்த பயணத்தூரத்திற்கு கட்டணம் 12 சதவீதத்தாலும், 100 கிலோ மீற்றருக்கும் அதிகமான பயண தூரத்துக்கான கட்டணம் 20 சதவீதத்தினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதேநேரம் சொகுசு பேருந்துகளுக்கான கட்டணத்தை முதல் 100 கிலோமீற்றருக்கான பயண தூரத்திற்கான கட்டணத்தை 12 சதவீதத்தினாலும், 100 கிலோமீற்றருக்கும் அதிக பயணத் தூரத்திற்கான கட்டணத்தை 15 சதவீதத்தினாலும் அதிரிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
புதிய கட்டண திருத்தத்துக்கமைய ஆரம்பக்கட்டணம் 34 ரூபாவாக அறவிடப்படும் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கம் குறிப்பிட்டுள்ளது.





