Breaking News
        
      இலங்கை மத்திய வங்கிக்கு புதிய துணை ஆளுநர்கள் நியமனம்
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
 
இலங்கை மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக கலாநிதி சி.அமரசேகர மற்றும் கே.ஜி.பி.சிறிகுமார ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
2023 ஆம் ஆண்டின் 16 ஆம் இலக்க இலங்கை மத்திய வங்கிச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைவாகவே இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.
அதன்படி உதவி ஆளுநரான கலாநிதி சி.அமரசேகர மற்றும் உதவி ஆளுநரான கே.ஜி.பி.சிறிகுமார ஆகியோர் முறையே இவ்வருடம் ஒக்டோபர் மாதம் 24 ஆம் திகதி மற்றும் நவம்பர் மாதம் 3 ஆம் திகதி முதல் நடைமுறைக்குவரும் வகையில் மத்திய வங்கியின் துணை ஆளுநர்களாக நிதியமைச்சரும் ஜனாதிபதியுமான அநுரகுமார திஸாநாயக்கவினால் நியமிக்கப்பட்டுள்ளனர்.