குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் ஆணைக்குழுவில் முறையிடுங்கள் அமைச்சர் வசந்த சமரசிங்க
சட்டத்தின் பிரகாரம் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான ஆவணங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்க நான் தான் சமர்ப்பித்தேன்.எனது சொத்து தொடர்பான ஆவணங்களை எவரும் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கவில்லை.

எனது சொத்துக்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கலாம். சொத்து மற்றும் பொறுப்பு தொடர்பான சகல ஆவணங்களையும் ஆணைக்குழுவுக்கு சமர்ப்பித்துள்ளேன்.எதனையும் மறைக்கவில்லை என வர்த்தகம், உணவு பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார்.
கொழும்பில் 18-09-205 அன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,
சட்டத்தின் பிரகாரம் சொத்து மற்றும் பொறுப்புகள் தொடர்பான ஆவணங்களை இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவுக்க நான் தான் சமர்ப்பித்தேன்.எனது சொத்து தொடர்பான ஆவணங்களை எவரும் ஆணைக்குழுவுக்கு முன்வைக்கவில்லை.
எனது சொத்து விபரங்களை எதிர்க்கட்சியினர் தமது அரசியல் பிரசாரத்துக்காக தற்போது எடுத்துக்கொண்டுள்ளார்கள். நான் நீண்டகாலமாக வியாபார நடவடிக்கைகளில் ஈடுபட்டேன்.எனது பரம்பரை சொத்துக்களும் உள்ளன.
எனது சொத்துக்கள் தொடர்பில் குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்கள் ஆணைக்குழுவில் முறைப்பாடளிக்கலாம்.முறையான வழியில் தான் இந்த சொத்துக்களை சேர்த்துள்ளேன்.
இதுவரைகாலமும் சொத்து மற்றும் பொறுப்பு விபரங்களை சமர்ப்பிக்காமல் இருந்தவர்கள் தற்போது கலக்கமடைந்துள்ளார்கள். ஊடகங்களில் குற்றச்சாட்டுக்களை முன்வைக்காமல் ஆணைக்குழுவில் முறைப்பாடளியுங்கள் என்று எதிர்க்கட்சிகளுக்கு குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றார்.