ரஷ்யாவுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை
7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு ஹவாய் மாநிலத்திற்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது,

ரஷ்யாவின் தூர கிழக்குப் பகுதியான கம்சட்காவின் கிழக்கு கடற்கரையில் ஞாயிற்றுக்கிழமை 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து ரஷ்யாவின் சில பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக அமெரிக்கத் தேசிய ஆழிப்பேரலை எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 10 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டது.
ஆனால், மற்ற நிலநடுக்கங்களால் ஆழிப்பேரலை எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. ஜிஎம்டி 0849 மணிக்கு ஏற்பட்ட 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம், பெட்ரோபாவ்லோவ்ஸ்க்-கம்சாட்ஸ்கி நகரத்திற்கு அருகில், பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள நிலநடுக்க மையத்திலிருந்து 300 கிலோமீட்டர் (186 மைல்) க்குள் அபாயகரமான ஆழிப்பேரலை அலைகள் சாத்தியமாகும் என்று அமெரிக்கப் புவியியல் ஆய்வு மையம் எச்சரித்தது.
முன்னதாக, 7.4 ரிக்டர் அளவிலான நிலநடுக்கத்திற்குப் பிறகு ஹவாய் மாநிலத்திற்கும் ஆழிப்பேரலை எச்சரிக்கை விடுக்கப்பட்டது, ஆனால் பின்னர் ரத்து செய்யப்பட்டது. அதிகாரிகள் நிலைமையை உன்னிப்பாக கண்காணித்து வருகின்றனர். இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம் மற்றும் உயிரிழப்பு குறித்து இதுவரை எந்தத் தகவலும் வெளியாகவில்லை.