முடிந்தால் மாகாணசபை தேர்தலை நடத்துங்கள்: ரஞ்சித் மத்துமபண்டார
பாராளுமன்றத்தில் 13-11-2025 அன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
வரவு, செலவு திட்டத்தில் அரச துறை, தனியார்துறையினருக்கு எந்த நன்மையும் இல்லை. அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு பதிலளிக்க மாகாணசபை தேர்தலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் 13-11-2025 அன்று இடம்பெற்ற அடுத்த வருடத்துக்கு ஜனாதிபதியினால் முன்வைக்கப்பட்ட வரவு செலவு திட்ட உரை மீதான ஐந்தாம் நாள் விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில், நாட்டின் அபிவிருத்தியை தடை செய்து இந்த நாட்டில் ஊழல் மோசடிகளில் யாராவது ஈடுபட்டிருந்தால், அவர்களைவிட நாட்டின் அபிவிருத்திக்கு எதிராக . மக்கள் விடுதலை முன்னணியும் விடுதலை புலிகளும் ஈடுபட்டு வந்திருக்கின்றன. மக்கள் விடுதலை முன்னணி அமைக்கப்பட்டு 60 வருடங்களில் இந்த நாட்டை ஆட்சி செய்துவந்த அனைத்து அரசாங்கங்களுக்கும் எதிராக செயற்பட்டு வந்தது. அதேபோன்று வெளிநாட்டு ஒப்பந்தங்களுக்கு எதிராக செயற்பட்டு வந்தார்கள். ஆனால் மக்கள் விடுதலை முன்னணி இன்று எமது வெளிநாட்டுக்கொள்கை, கல்விக்கொள்கை, பொருளாதாரக் கொகையை ஏற்றுக்கொண்டிருக்கிறது. அன்று இதற்கு எதிர்ப்பு தெரிவித்திருக்காவிட்டால், நாடு அபிவிருத்தியடைந்திருக்கும்.
மேலும் நாடு வீழ்ச்சியடைவதற்கு இந்த அரசாங்கமும் பொறுப்புக்கூறவேண்டும். சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை பெறும்போது அதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார்கள். ஆனால் இன்று நாணய நிதியத்தின் தாலத்துக்கும் ஆடும் நிலையில் ஜனாதிபதி அநுரகுமார இருக்கிறார். மக்களின் அத்தியாவசிய பொருட்களின் நூற்றுக்கு 18வீதம் வரி குறைப்பதாக ஜனாதிபதி தெரிவித்திருந்தார். குறைத்தீர்களா என கேட்கிறோம். துறைமுகத்தில் இறக்கப்படும் கட்டணத்துக்கு எரிபொருள் வழங்குவதாக அமைச்சர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்திருந்தார்.வழங்குகிறார்களா? எமது காலத்தில் இருந்ததைவிட எரிபொருள் விலை தற்போது அதிகமாகும்.
சர்வதேச நாணய நிதியத்தின் கைபொம்மையாக மாறியுள்ள இந்த அரசாங்கம் மக்களுக்கு அளித்த வாக்குறுதிகளை மறந்துள்ளது. நாங்கள் அட்சியில் இருக்கும்போது நாட்டில் வறுமை வீதம் நூற்றுக்கு 10வீதமாகவே இருந்தது. தற்போது அது நூற்றுக்கு 35வீதமாக அதிகரித்துள்ளது. அதனால் திறைசேரியில் பணம் அதிகமாக இருந்தால், மக்களுக்கு வழங்குவதாக தெரிவித்த நிவாரணங்களை வழங்குங்கள். அரச ஊழியர்களின் வாக்குகளை பெற்றுக்கொண்ட அரசாங்கம் அரச ஊழியர்களை ஏமாற்றி இருக்கின்றனர்.
எனவே வரவு செலவு திட்டத்தில் அரசதுறை, தனியார் துறை என யாருக்கும் எந்த நன்மையும் இல்லை. அதனால் மக்கள் அரசாங்கத்துக்கு பதிலளிக்க மாகாணசபை தேர்தலை எதிர்பார்த்து இருக்கிறார்கள். அதனால் முடிந்தால் அரசாங்கம் மாகாணசபை தேர்தலை நடத்தட்டும். பாெதுத் தேர்தலைவிட உள்ளூராட்சிமன்ற தேர்தலில் அரசாங்கத்துக்கு 23இலட்சம் வாக்குகள் குறைவடைந்துள்ளது. மாகாணசபை தேர்தலை நடத்தினால் மேலும் 25இலட்சம் வாக்குகள் இல்லாமல்போகும். அதனால் முடிந்தால் தேர்தலை நடத்துமாறு அரசாங்கத்துக்கு சவால் விடுகிறேன் என்றார்.





