36 நீர்த்தேக்கங்கள் வான் பாய்கின்றன
நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறப்பதன் மூலம் தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தபட்ச மட்டத்திலேயே காணப்படுகிறது.
நீர்ப்பாசன திணைக்களத்திற்குச் சொந்தமான 36 பிரதான நீர்த்தேக்கங்களும், 46-க்கும் அதிகமான நடுத்தர அளவிலான நீர்த்தேக்கங்களும் தற்போது வான் பாய்ந்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களத்தின் நீர் முகாமைத்துவப் பணிப்பாளர் எச்.பி.எஸ்.டி. ஹேரத் தெரிவித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அநுராதபுர மாவட்டத்தில் அனைத்துப் பிரதான நீர்த்தேக்கங்களும் வான் பாய்கின்றன.
அம்பாறை மாவட்டத்தில் 9 நீர்த்தேங்களில் 3 நீர்த்தேக்கங்களும், பதுளை மாவட்டத்தில் 7 நீர்த்தேங்களில் 3 நீர்த்தேக்கங்களும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 நீர்த்தேங்களில் 3 நீர்த்தேக்கங்களும், அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 10 நீர்த்தேங்களில் 4 நீர்த்தேக்கங்களும், கண்டி மாவட்டத்தில் 3 நீர்த்தேங்களில் 2 நீர்த்தேக்கங்களும் வான் பாய்கின்றன.
குருநாகல் மாவட்டத்தில் 10 நீர்த்தேங்களில் 4 நீர்த்தேக்கங்களும் மொனராகலை மாவட்டத்தில் 3 நீர்த்தேங்களில் ஒரு நீர்த்தேக்கமும் பொலன்னறுவை மாவட்டத்தில் 4 நீர்த்தேங்களில் 2 நீர்த்தேக்கங்களும் திருகோணமலை மாவட்டத்தில் 5 நீர்த்தேங்களில் 3 நீர்த்தேக்கங்களும் மன்னார் மாவட்டத்தில் 4 நீர்த்தேங்களில் ஒரு நீர்த்தேக்கமும் வான் பாய்கின்றன.
நீர்த்தேக்கங்களின் வான் கதவுகளைத் திறப்பதன் மூலம் தற்போது வெளியேற்றப்படும் நீரின் அளவு குறைந்தபட்ச மட்டத்திலேயே காணப்படுகிறது. எனினும், எதிர்காலத்தில் கிடைக்கும் மழைவீழ்ச்சிக்கு ஏற்ப வான் கதவுகளைத் திறக்கும் அளவு மாறுபடலாம்.
தற்போது வெளியேற்றப்படும் நீரினால் தாழ்நிலப் பகுதிகளில் வெள்ள அபாயமோ அல்லது நீர் மட்டம் அதிகரிப்பதோ அவதானிக்கப்படவில்லை என்றாலும், தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் நீர் வெளியேற்றப்படுவது தொடர்பான அறிவிப்புகள் குறித்துத் தீவிர அவதானத்துடன் இருப்பது மிக முக்கியம் என்றார்.





