புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை உடனடியாக கைவிடுங்கள்: விமல் வீரவன்ச
சர்ச்சைக்குரிய புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு எதிர்கால தலைமுறையினரை அழிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாதென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார். தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் 10-01-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முறையான கலந்துரையாடல்கள், பொதுமக்களின் அபிப்ராயங்களை கோராமலேயே அரசாங்கம் புதிய கல்வி மறுசீரமைப்பை அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் டொலர்களை பெறுவதற்காக அவர்களுக்கு ஏற்றாற்போல் புதிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய கல்வி கொள்கை ஆசிரியர்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்காமல் மாணவர்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி திரட்டலை இலக்காகக் கொண்டு புதிய கல்வித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு தேசியம் மற்றும் நாட்டின் கலாசாரம் தொடர்பில் எவ்வித அக்கறையும் கிடையாது. அவர் மேற்குலக நாடுகளின் கொள்கைகளை அரசாங்கத்தில் முன்னிலைப்படுத்துகிறார். ஆறாம் தர பாடத்தொகுதியில் தவறான விடயத்தை உள்ளடக்கியது யார் என்பதை அறிவோம். ஆனால் அதவை வெளிப்படுத்த போவதில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகிறார். அரசாங்கத்தால் உண்மையை வெளிப்படுத்த முடியாது தான், ஏனெனில் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைவாகவே இந்த சர்ச்சைக்குரிய விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு எதிர்கால தலைமுறையினரை அழிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது. நாட்டுக்கு பொருத்தமற்ற இந்த புதிய கல்வி கொள்கையை எவர் எதிர்த்தாலும் செயற்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். மக்கள் விடுதலை முன்னணிக்கு தேவையான வகையில் நாட்டின் கல்வி கட்டமைப்பை மாற்றியமைக்க முடியாது. அரசாங்கம் இந்த விடயத்தில் முறையாக செயற்படாவிடின் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.
சர்ச்சைக்குரிய புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு எதிர்கால தலைமுறையினரை அழிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாதென தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவன்ச தெரிவித்தார்.
தேசிய சுதந்திர முன்னணியின் காரியாலயத்தில் 10-01-2026 அன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், முறையான கலந்துரையாடல்கள், பொதுமக்களின் அபிப்ராயங்களை கோராமலேயே அரசாங்கம் புதிய கல்வி மறுசீரமைப்பை அமல்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி மற்றும் உலக வங்கியின் டொலர்களை பெறுவதற்காக அவர்களுக்கு ஏற்றாற்போல் புதிய கல்வி கொள்கை தயாரிக்கப்பட்டுள்ளது.
புதிய கல்வி கொள்கை ஆசிரியர்களை அடிப்படையாகக் கொண்டு தயாரிக்காமல் மாணவர்களை இலக்காகக் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது. நிதி திரட்டலை இலக்காகக் கொண்டு புதிய கல்வித் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.
பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு தேசியம் மற்றும் நாட்டின் கலாசாரம் தொடர்பில் எவ்வித அக்கறையும் கிடையாது. அவர் மேற்குலக நாடுகளின் கொள்கைகளை அரசாங்கத்தில் முன்னிலைப்படுத்துகிறார்.
ஆறாம் தர பாடத்தொகுதியில் தவறான விடயத்தை உள்ளடக்கியது யார் என்பதை அறிவோம். ஆனால் அதவை வெளிப்படுத்த போவதில்லை என்று கல்வி அமைச்சின் செயலாளர் குறிப்பிடுகிறார். அரசாங்கத்தால் உண்மையை வெளிப்படுத்த முடியாது தான், ஏனெனில் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு அமைவாகவே இந்த சர்ச்சைக்குரிய விடயம் உள்ளடக்கப்பட்டுள்ளது.
சர்ச்சைக்குரிய புதிய கல்வி மறுசீரமைப்பு திட்டத்தை அரசாங்கம் உடனடியாக கைவிட வேண்டும். புதிய விடயங்களை அறிமுகப்படுத்துவதாக குறிப்பிட்டுக் கொண்டு எதிர்கால தலைமுறையினரை அழிக்கும் செயற்பாடுகளுக்கு இடமளிக்க முடியாது.
நாட்டுக்கு பொருத்தமற்ற இந்த புதிய கல்வி கொள்கையை எவர் எதிர்த்தாலும் செயற்படுத்துவதாக ஜனாதிபதி குறிப்பிடுகிறார். மக்கள் விடுதலை முன்னணிக்கு தேவையான வகையில் நாட்டின் கல்வி கட்டமைப்பை மாற்றியமைக்க முடியாது. அரசாங்கம் இந்த விடயத்தில் முறையாக செயற்படாவிடின் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.





